2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அலைஸா ஹீலி சாதனை 148*: இலங்கையை வெள்ளையடித்தது அவுஸ்திரேலியா

Editorial   / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, இலங்கை பெண்கள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், தமது ஆரம்பத்துடுப்பாட்டவீராங்கனை அலைஸா ஹீலியின் பெண்களுக்கான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளின் அதிகூடிய தனிநபர் ஓட்டங்களோடு இலங்கையை அவுஸ்திரேலியா வெள்ளையடித்தது.

இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வென்றிருந்த அவுஸ்திரேலியா, சிட்னியில் இன்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே இலங்கையை 3-0 என வெள்ளையடித்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா: 226/2 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அலைஸா ஹீலி ஆ.இ 148 (61), றேச்சல் ஹெய்ன்ஸ் 41 (37) ஓட்டங்கள். பந்துவீச்சு: சாமரி அத்தப்பத்து 2/27 [4])

இலங்கை: 94/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சாமரி அத்தப்பத்து 30 (39), ஹர்ஷிதா மாதவி 28 (33) ஓட்டங்கள். பந்துவீச்சு: நிக்கொலா காரி 3/15 [4], ஜோர்ஜியான் வரென்ஹாம் 1/8 [3], மேகன் ஸ்கட் 1/8 [2], டைலா விளாமிங்க் 1/18 [3])

போட்டியின் நாயகி: அலைஸா ஹீலி

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .