2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அவுஸ்திரேலியாவை வீழ்த்துமா தென்னாபிரிக்கா?

Editorial   / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடர் நாளை ஆரம்பிக்கிறது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரானது ஜொஹன்னஸ்பேர்க்கில்நாளை இரவு 9.30மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேச உலகக் கிண்ணத் தொடரானது இவ்வாண்டு நடைபெறவுள்ள நிலையில் எல்லா அணிகளுக்கும் அதற்கு முந்தைய இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகள் அவ்வணிகள் தம்மை பரீட்சிப்பதற்கு முக்கியமானவையாக இருக்கின்ற நிலையில் இத்தொடரானது முக்கியத்துவம் பெறுகிறது.

இங்கிலாந்துடனான தமது இறுதி இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் மயிரிழையிலேயே தென்னாபிரிக்கா இழந்த நிலையில், அணித்தலைவர் குயின்டன் டி கொக்கின் தலைமைத்துவத்தின் கீழ் பலமானதாகக் காணப்படுகிறது.

இந்நிலையில், முன்னாள் அணித்தலைவர் பப் டு பிளெஸி, ககிஸோ றபாடா, அன்றிச் நொர்ட்ஜே ஆகியோரின் மீள்வருகையானது தென்னாபிரிக்காவுக்கு நிச்சயமாக மேலும் பலத்தை வழங்கும்.

அந்தவகையில், குயின்டன் டி கொக், தெம்பா பவுமா, றஸி வான் டர் டுஸன், டேவிட் மில்லர் பப் டு பிளெஸியுடன் ககிஸோ றபாடா, லுங்கி என்கிடி, தப்ரையாஸ் ஷம்சி, அன்டிலி பெக்லுவாயோ, டேல் ஸ்டெய்னுடன் வெல்லுவதற்கு கடினமான அணியாகவே அவுஸ்திரேலியாவுக்கு தென்னாபிரிக்கா விளங்கப்படுகிறது.

மறுபக்கமாக ஆரோன் பின்ஞ், டேவிட் வோணர், ஸ்டீவ் ஸ்மித் எனப் பலமாக முன்வரிசையில் காட்சியளிக்கும் அவுஸ்திரேலியா மத்தியவரிசையில் தமதிடங்களை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.

அந்தவகையில், அவுஸ்திரேலியக் குழாமிலுள்ள மத்தியூ வேட், மிற்செல் மார்ஷ், டார்சி ஷோர்ட் ஆகியோர் உலகக் கிண்ண குழாமில் தமதிடங்களை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் கொண்ட தொடராக இத்தொடர் காணப்படுகிறது.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவானது பற் கமின்ஸ், மிற்செல் ஸ்டார்க் என முதன்மை வேகப்பந்துவீச்சாளர்களைக் கொண்டிருக்கின்ற நிலையில் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளருக்கான இடத்தைப் பிடிப்பதற்கு ஷோன் அபொட், ஜஹை றிச்சர்ட்ஸன், கேன் றிச்சர்ட்ஸன் ஆகியோருக்கு இத்தொடர் சிறந்த வாய்ப்பாகக் காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .