2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அவுஸியின் ஒப்பந்த வீரர்கள் பட்டியல்

Editorial   / 2018 ஏப்ரல் 11 , பி.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 20 வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள பட்டியலில், தடைக்குள்ளாகியுள்ள முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித், இன்னொரு முன்னாள் அணித்தலைவர் டேவிட் வோணர், இளம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கமரோன் பேன்குரோப்ட் ஆகியோர் இடம்பெறவில்லை.

இவர்கள் தவிர, கடந்தாண்டு பட்டியலில் இடம்பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர்கள் ஜக்ஸன் பேர்ட், ஜேம்ஸ் பற்றின்ஸ் மற்றும் சகலதுறை வீரர் ஹில்டன் கார்ட்ரைட், சுழற்பந்துவீச்சாளர் அடம் ஸாம்பா, விக்கெட் காப்பாளர் மத்தியூ வேட் ஆகியோரும் பட்டியலில் இடம்பெறவில்லை.

அடுத்தாண்டு உலகக் கிண்ணத்தை கருத்திற் கொண்டு அலெக்ஸ் காரே, ஜைஹை றிச்சர்ட்ஸன், கேன் றிச்சர்ட்ஸன், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், அன்றூ டை ஆகியோரும் டெஸ்ட் தலைவரான டிம் பெய்ன், துடுப்பாட்ட வீரர் ஷோன் மார்ஷ் ஆகியோர் புதிதாக பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

பட்டியல்: அஸ்தன் அகர், அலெக்ஸ் கரே, பற் கமின்ஸ், ஆரோன் பின்ஞ், பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப், ஜொஷ் ஹேசில்வூட், ட்றெவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, நேதன் லையன், கிளென் மக்ஸ்வெல், ஷோண் மார்ஷ், மிற்சல் மார்ஷ், டிம் பெய்ன், மத்தியூ றென்ஷோ, ஜைஹை றிச்சர்ட்ஸன், கேன் றிச்சர்ட்ஸன், பில்லி ஸ்டான்லேக், மிற்சல் ஸ்டார்க், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், அன்றூ டை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X