2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அவுஸ்திரேலிய அணியின் பஸ்ஸுக்கு கல்வீச்சு

Editorial   / 2017 ஒக்டோபர் 11 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி இடம்பெற்ற குவாகாத்தி மைதானத்திலிருந்து அவுஸ்திரேலிய அணி வீரர்களின் பஸ் வெளியேறியபோது கல் எறியப்பட்டுள்ளது.

தமது அணியின் பஸ்ஸுக்கு கல் எறியப்பட்டது என்று, கண்ணாடி உடைந்த தங்களின் பஸ்ஸின் படத்தை, தனது டுவிட்டர் கணக்கில், அவுஸ்திரேலிய அணி வீரர் ஆரோன் பின்ஞ் பதிவேற்றியிருந்தார்.

குறித்த சம்பவத்தில், எவரும் பாதிப்படைந்திருக்கவில்லை. இந்நிலையில், குறித்த சம்பவத்தைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய அணி தங்கியிருந்த ஹொட்டலைச் சூழ பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் இணைத்தளத்திலுள்ள அறிக்கையொன்றின்படி, கண்ணாடியை உடைத்துக் கொண்டு பஸ்ஸுக்குள் விழுந்த கல் வந்த யன்னலுக்கு அடுத்ததாக எவரும் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பங்களாதேஷிலும் இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே மாதிரியொரு சம்பவம் இடம்பெற்றிருந்தது. அவுஸ்திரேலிய அணியின் பஸ் மீது வீதிச் சிறுவர்கள் ஏதையோ எறிந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, குறித்த போட்டியில், ஜேஸன் பெஹட்ரோவ், அடம் ஸாம்பாவின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல், 20 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து, 118 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அந்தவகையில், 199 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி,  மொய்ஸஸ் ஹென்றிக்கஸ், ட்ரெவிஸ் ஹெட் ஆகியோரின் அதிரடித் துடுப்பாட்டம் மூலம் 15.3 ஓவர்களிலேயே, 2 விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .