2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அவுஸ்திரேலியக் குழாமில் மார்க்கஸ் ஹரிஸ்

Editorial   / 2018 நவம்பர் 22 , பி.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளுக்கான அவுஸ்திரேலியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இக்குழாமில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மார்க்கஸ் ஹரிஸ் இடம்பெற்றுள்ளார்.

அந்தவகையில், முதற்தடவையாக அவுஸ்திரேலியக் குழாமொன்றில் மார்க்கஸ் ஹரிஸ் இடம்பிடித்துள்ள நிலையில், 14 பேர் கொண்ட குறித்த குழாமுக்கு துடுப்பாட்ட வீரர் பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப் மீள அழைக்கப்பட்டுள்ளதோடு, வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் ட்ரிமெய்ன் டெஸ்ட் குழாமொன்றில் இடம்பெற்றுள்ளார். மறுபக்கமாக, மற் றென்சோ, மனுஷ் லபுஷைன் ஆகியோர் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.  

குழாம்: மார்க்கஸ் ஹரிஸ், ஆரோன் பின்ஞ், உஸ்மான் கவாஜா, ஷோண் மார்ஷ், ட்ரெவிஸ் ஹெட், மிற்செல் மார்ஷ், டிம் பெய்ன் (அணித்தலைவர், விக்கெட் காப்பாளர்), பற் கமின்ஸ், மிற்செல் ஸ்டார்க், ஜொஷ் ஹேசில்வூட், நேதன் லையன், கிறிஸ் ட்ரிமெய்ன், பீற்றர் சிடில், பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .