2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அவுஸ்திரேலியன் குரான்ட் பிறீயை வென்றார் போத்தாஸ்

Editorial   / 2019 மார்ச் 18 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடப்பு உலக சம்பியனான சக மெர்சிடீஸ் அணி ஓட்டுநரான பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டனை முந்தியதைத் தொடர்ந்து, நடப்பு ஃபோர்மியுலா வண் பருவகாலத்தின் முதலாவது பந்தயமான அவுஸ்திரேலியன் குரான் பிறீயை முழுமையாக ஆதிக்கம் செலுத்து, மெர்சிடீஸின் பின்லாந்து ஓட்டுநரான வல்டேரி போத்தாஸ் வென்றார்.

அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் நேற்று இடம்பெற்றிருந்த குறித்த பந்தயத்தை முதல்நிலையிலிருந்து ஆரம்பித்த லூயிஸ் ஹமில்டன், மெதுவாக பந்தயத்தை ஆரம்பித்திருந்த நிலையில், இரண்டாம் நிலையிலிருந்து பந்தயத்தை ஆரம்பித்த வல்டேரி போத்தாஸ், ஆரம்பத்திலேயே முன்னிலையைப் பெற்றதுடன், இப்பருவகாலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேகமான சுற்றுக்கான புதிய போனஸ் புள்ளியையும் பெற்றுக் கொண்டார்.

அந்தவகையில், இரண்டாமிடத்துக்கு பாரியளவில் பின்தள்ளப்பட்டிருந்த லூயிஸ் ஹமில்டன், றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பனை முந்தவிடமால் செய்து இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், இப்பந்தயத்தை மூன்றாமிடத்திலிருந்து ஃபெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல் ஆரம்பித்திலிருந்தபோதும், அவரை மக்ஸ் வெர்ஸ்டப்பன் முந்தி மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தார்.

அந்தவகையில், பருவகாலத்துக்கு முந்தையதான சோதனைகளில் ஃபெராரி அணி வேகமாக இருந்திருந்தபோதும், குறித்த பந்தயத்தின்போது, தாங்கள் ஏன் மெதுவாக இருக்கின்றோம் என செபஸ்டியல் வெட்டல் வினவியிருந்தநிலையில், தற்போதைய தருணத்தில் தெரியாது என அவருக்கு பதில் வழங்கப்பட்டிருந்தமையானது இவ்வார ஃபெராரி அணியின் பெறுபேறுகளைப் பிரதிபலித்திருந்தது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த வல்ட்டேரி போத்தாஸ், “என்ன இப்போது நடந்தது என எனக்குத் தெரியாது. என்ன கூறுவதென்று எனக்குத் தெரியவில்லை. ஆரம்பம், மிகவும் சிறப்பானது. இது, நிச்சயமாக, எனது வாழ்நாளில் மிகச்சிறந்த பந்தயம்” எனக் கூறினார்.

இதேவேளை, கருத்துத் தெரிவித்த லூயிஸ் ஹமில்டன், அணிக்கு இது சிறந்ததொரு வாரயிறுதி என்றதுடன் ஆரம்பத்தில் முதல்நிலையை இழந்தது சிறிது ஏமாற்றமென்றும் ஆனால், தான் பயிற்சியை மட்டும் மேற்கொண்டு, அடுத்த பந்தயத்துக்காக கடினமாக உழைப்பேன் என்று கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .