2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அவுஸ்திரேலியா எதிர் இந்தியா: பலத்துடன் களமிறங்குகிறது இந்தியா

Editorial   / 2018 நவம்பர் 21 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கு இடையிலான முழுமையான கிரிக்கெட் தொடரொன்று, இன்று (21) ஆரம்பிக்கிறது. பிறிஸ்பேணில் இடம்பெறும் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியுனேயே, இத்தொடர் ஆரம்பிக்கிறது.

இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் 3, டெஸ்ட் போட்டிகள் 4, ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் 3 என, கிட்டத்தட்ட 2 மாதங்கள் நீடிக்கும் தொடராக, இத்தொடர் அமைகிறது.

இன்று இடம்பெறும் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி, இலங்கை நேரப்படி மதியம் 1.20க்கு ஆரம்பிக்கவுள்ளது.

அவுஸ்திரேலிய அணி, அண்மையில் நடைபெற்ற அநேகமான போட்டிகளில் தோல்வியைத் தழுவி, பலவீனமான நிலையிலேயே காணப்படுகிறது.

மூன்று வகையிலான போட்டிகளில், இறுதியாகப் பங்குபற்றிய 24 போட்டிகளில், வெறுமனே 5 போட்டிகளில் வெற்றியீட்டியுள்ள அவுஸ்திரேலியா, 18 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில், இறுதி 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ள அவ்வணி, இறுதி 8 போட்டிகளில் வென்றுள்ள 2 போட்டிகளும், முறையே ஐக்கிய அரபு அமீரகம், சிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு எதிரானவையாகும்.

முன்னணி வீரர்களான ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வோணர் ஆகியோரை இழந்துள்ள நிலையில், துடுப்பாட்டத்தில் ஓட்டங்களைப் பெறுவதற்குத் தடுமாறிவரும் அவுஸ்திரேலியா, தன்னம்பிக்கையிலும் மிகவும் தளர்வான நிலையிலேயே காணப்படுகிறது.

மறுபக்கமாக இந்திய அணி, அண்மையில் விளையாடிய அநேகமான அணிகளை அடித்து விளாசிய நிலைமையில், முழுமையான தன்னம்பிக்கையுடன் இத்தொடரில் களமிறங்குகிறது. மூன்று வகையான போட்டிகளிலும், அவுஸ்திரேலியாவை விட, அதிகளவு சமநிலையான அணியைக் கொண்டுள்ள இந்திய அணி, மூன்று தொடர்களையும் கைப்பற்றும் வாய்ப்பைக் கொண்டுள்ளது.

இரு அணிகளினதும் தரவரிசைகள்

டெஸ்ட்: இந்தியா - 1, அவுஸ்திரேலியா 5

ஒ.நா.ச.போ: இந்தியா - 2, அவுஸ்திரேலியா - 6

இ-20 ச.போ: இந்தியா - 2, அவுஸ்திரேலியா - 3.
 

போட்டி அட்டவணை:

  • நவ. 21: முதலாவது இ-20 சர்வதேசப் போட்டி
  • நவ. 23: இரண்டாவது இ-20 சர்வதேசப் போட்டி
  • நவ. 25: மூன்றாவது இ-20 சர்வதேசப் போட்டி
     
  • டிச. 6 - 10: முதலாவது டெஸ்ட்
  • டிச. 14 - 18: இரண்டாவது டெஸ்ட்
  • டிச. 26 - 30: மூன்றாவது டெஸ்ட்
  • ஜன. 3 - 7: நான்காவது டெஸ்ட்

 

  • ஜன. 12: முதலாவது ஒ.நா.ச.போ
  • ஜன. 15: இரண்டாவது ஒ.நா.ச.போ
  • ஜன. 18: மூன்றாவது ஒ.நா.ச.போ

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .