2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அவுஸ்திரேலியா எதிர் பாகிஸ்தான்: டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கின்றது

Editorial   / 2018 ஒக்டோபர் 06 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், டுபாயில் இலங்கை நேரப்படி நாளை முற்பகல் 11.30க்கு ஆரம்பிக்கும் முதலாவது டெஸ்டுடன் ஆரம்பிக்கின்றது.

இத்தொடருக்குள் சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் மூன்றாமிடத்தில் அவுஸ்திரேலியாவும் ஏழாமிடத்தில் பாகிஸ்தானும் என்றவாறு நுழைகின்ற நிலையில், இத்தொடரின் முடிவானது பாகிஸ்தானின் தரவரிசையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றபோதும் அவுஸ்திரேலியாவின் தரவரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்தியத் தீவுகளுடனான டெஸ்ட் தொடரில் 0-2 என இந்தியா வெள்ளையடிக்கப்பட்டு, தாம் பாகிஸ்தானை 2-0 என வெள்ளையடித்தால் முதலாமிடத்துக்குச் செல்லும் வாய்ப்பைக் கொண்டிருக்கும் அவுஸ்திரேலியா, இந்தியா வெள்ளையடிக்கப்படாது தாம் தொடரை 1-0 அல்லது 2-0 என வென்றால் இரண்டாம் நிலைக்கு முன்னேறும் வாய்ப்பைக் கொண்டிருக்கிறது.

மறுபக்கமாக, தொடரை 0-0 எனவோ அல்லது 1-1 எனவோ சமப்படுத்தினால் நான்காமிடத்துக்கு அவுஸ்திரேலியா கீழிறங்கும் என்பதோடு, 0-1 என அல்லது 0-2 என தொடரை இழந்தால் ஐந்தாமிடத்துக்கு அவுஸ்திரேலியா கீழிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இத்தொடரில் சுழற்பந்துவீச்சே முக்கிய பங்கு வகிக்கவுள்ள நிலையில், அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சுழற்பந்துவீச்சை எவ்வாறு எதிர்கொள்கின்றார்கள் என்பதிலேயே தொடரின் போக்கு அமையவுள்ளது.

அந்தவகையில், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோணர் ஆகியோர் இல்லாத நிலையில், மிற்செல் மார்ஷ், ஷோர்ன் மார்ஷ், டிம் பெய்ன் ஆகியோர் எவ்வாறு துடுப்பெடுத்தாடுகின்றனர் என்பதிலேயே அவுஸ்திரேலியாவின் வெற்றி வாய்ப்புகள் தங்கியுள்ளன.

இதுதவிர, நேதன் லையனோடு, தனது அண்மைய போட்டிகளில் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜோன் ஹொலன்டும் சேர்ந்து பாகிஸ்தானிய துடுப்பாட்ட வீரர்களுக்கு சவாலை வழங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கமாக, பாகிஸ்தான் அணிக்கு வழமை போன்று முக்கியமானவராக சிரேஷ்ட சுழற்பந்துவீச்சாளர் யசீர் ஷாவே காணப்படுகின்றார். அஸார் அலியை தவிர அனுபமில்லாத இமாம் உல் ஹக், டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்காத பக்கர் ஸமன் ஆகியோரே முன்வரிசை வீரர்களாக குழாமில் காணப்படுகின்ற நிலையில், சிரேஷ்ட வீரரான மொஹமட் ஹபீஸ் சேர்த்துக் கொள்ளப்பட்டமை அனுபவத்தை வழங்குவதோடு, அவரது சுழற்பந்துவீச்சும் மிகுந்த பயனைத் தருவதாக அமையும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .