2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

அவுஸ்திரேலியாவுக்கெதிரான ODI தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்கா

Editorial   / 2018 நவம்பர் 11 , பி.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் (ODI) தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியது.

இத்தொடரின் முதலாவது போட்டியை தென்னாபிரிக்காவும் இரண்டாவது போட்டியை அவுஸ்திரேலியாவும் வென்றிருந்த நிலையிலேயே, ஹோபார்ட்டில் இன்று இடம்பெற்ற தீர்மானமிக்க மூன்றாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்ற நிலையிலேயே தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்றிருந்த அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பின்ஞ், தென்னாபிரிக்க அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்திருந்தார்.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

தென்னாபிரிக்கா: 320/5 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: டேவிட் மில்லர் 139 (108), பப் டு பிளெஸி 125 (114) ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்டார்க் 2/57 [10], மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 2/70 [7], ஜொஷ் ஹேசில்வூட் 1/53 [10])

அவுஸ்திரேலியா: 280/9 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷோண் மார்ஷ் 106 (102), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 63 (76) ஓட்டங்கள். பந்துவீச்சு: கஜிஸோ றபாடா 3/40 [10], டேல் ஸ்டெய்ன் 3/45 [10], டுவைன் பிறிட்டோறியஸ் 2/61 [10], லுங்கி என்கிடி 1/56 [10])

போட்டியின் நாயகன்: டேவிட் மில்லர்

தொடரின் நாயகன்: டேவிட் மில்லர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .