2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா

Editorial   / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என தென்னாபிரிக்கா நேற்றுக் கைப்பற்றியது. ஜொஹன்னஸ்பேர்க்கில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான நான்காவது டெஸ்டை நேற்று வென்றமையைத் தொடர்ந்தே 3-1 என்ற ரீதியில் தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியது.

நேற்றைய ஐந்தாம் நாளை, தமது இரண்டாவது இனிங்ஸில் 88 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தவாறு ஆரம்பித்த அவுஸ்திரேலியா, நாளின் முதற்பந்திலிருந்தே வேர்ணன் பிலாந்தரின் பந்துவீச்சில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து, இறுதியாக 119 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 492 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், ஜோ பேர்ண்ஸ் 42, பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப் 24 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், வேர்ணன் பிலாந்தர் 6, மோர்னி மோர்கல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக வேர்ணன் பிலாந்தர் தெரிவானதோடு, தொடரின் நாயகனாக கஜிஸோ றபாடா தெரிவானார்.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்கா: 488/10 (துடுப்பாட்டம்: ஏய்டன் மர்க்ரன் 152, தெம்பா பவுமா 95, ஏ.பி டி வில்லியர்ஸ் 69, கேஷவ் மஹராஜ் 45, குயின்டன் டி கொக் 39 ஓட்டங்கள். பந்துவீச்சு: பற் கமின்ஸ் 5/83, நேதன் லையன் 3/182, சட் சேயர்ஸ் 2/78)

அவுஸ்திரேலியா: 221/10 (துடுப்பாட்டம்: டிம் பெய்ன் 62, உஸ்மான் கவாஜா 53, பற் கமின்ஸ் 50 ஓட்டங்கள். பந்துவீச்சு: வேர்ணன் பிலாந்தர் 3/30, கஜிஸோ றபாடா 3/53, கேஷவ் மஹராஜ் 3/92)

தென்னாபிரிக்கா: 344/6 (துடுப்பாட்டம்: பப் டு பிளெஸி 120, டீன் எல்கர் 81, ஏய்டன் மர்க்ரம் 37, தெம்பா பவுமா ஆ.இ 35, வேர்ணன் பிலாந்தர் ஆ.இ 33 ஓட்டங்கள். பந்துவீச்சு: பற் கமின்ஸ் 4/58,  நேதன் லையன் 2/116)

அவுஸ்திரேலியா: 119/10 (துடுப்பாட்டம்: ஜோ பேர்ண்ஸ் 42, பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப் 24 ஓட்டங்கள். பந்துவீச்சு: வேர்ணன் பிலாந்தர் 6/21, மோர்னி மோர்கல் 2/28)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X