2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அவுஸ்திரேலியாவைத் தோற்கடித்தது இந்தியா

Editorial   / 2018 நவம்பர் 18 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக இருபதுக்கு – 20 தொடரில், கயானாவில் நேற்று இடம்பெற்ற குழு பி போட்டியொன்றில் அவுஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்தது.

அந்தவகையில், குறித்த குழுவிலிருந்து இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றிருந்த நிலையில், குறித்த போட்டி முடிவுடன் குறித்த குழுவிலிருந்து வெற்றியாளர்களாக அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதிபெற்றுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இந்தியா

இந்தியா: 167/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஸ்மிருதி மந்தனா 83 (55), ஹர்மன் பிறீட் கெளர் 43 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: எலைஸ் பெரி 3/16 [3])

அவுஸ்திரேலியா: 119/10 (19.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: எலைஸ் பெரி ஆ.இ 39 (28) ஓட்டங்கள். பந்துவீச்சு: அனுஜா பட்டீல் 3/15 [3.4], ராதா யாதவ் 2/13 [4], தீப்தி ஷர்மா 2/24 [4], பூனம் யாதவ் 2/28 [4])

போட்டியின் நாயகி: ஸ்மிருதி மந்தனா

இதேவேளை, இபோட்டியைத் தொடர்ந்து கயானாவில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற பிறிதொரு குழு பி போட்டியில், 12.3 ஓவர்கள் மீதமிருக்கையில் 8 விக்கெட்டுகளால் அயர்லாந்தை நியூசிலாந்து வென்றிருந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அயர்லாந்து

அயர்லாந்து: 79/9 (20 ஓவ.) (துடுப்பாட்டம்: கபி லூயிஸ் 39 (36) ஓட்டங்கள். பந்துவீச்சு: லெய் கஸ்பெரெக் 3/19 [4], லியா தஹுஹு 2/17 [4], அமெலியா கெர் 2/18 [4])

நியூசிலாந்து: 81/2 (7.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: சோபி டெவைன் 51 (22) ஓட்டங்கள்)

போட்டியின் நாயகி: சோபி டெவைன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X