2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அஸார்பைஜானில் வென்றார் டானியல் றிச்சியார்டோ

Editorial   / 2017 ஜூன் 27 , மு.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸார்பைஜான் கிரான்ட் பிறிக்ஸில், றெட் புல் அணியின் அவுஸ்திரேலிய ஓட்டுநரான டானியல் றிச்சியார்டோ வெற்றிபெற்றார்.  

நேற்று முன்தினம் (25) இடம்பெற்ற இப்பந்தயத்தில், மெர்சிடிஸ் அணியின் பின்லாந்து ஓட்டுநரான வல்ட்டேரி போத்தாஸ் இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, வில்லியம்ஸ் அணியின் பின்லாந்து ஓட்டுநரான லான்ஸ் ஸ்ட்ரோல் மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தார்.  

இப்பந்தயத்தில், மெர்சிடிஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டனின் பாதையில் வந்தமைக்காக, 10 செக்கன்கள் நிறுத்த தண்டத்தை, பெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல் பெற்றபோதும், நான்காமிடத்தைப் பெற்று, ஐந்தாமிடத்தைப் பெற்ற ஹமில்டனை விட இரண்டு புள்ளிகள் அதிகமாகப் பெற்று, தனது சம்பியன்ஷிப் முன்னிலையை 14 ஆக அதிகரித்துக் கொண்டார்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .