2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அஸார்பைஜான் குரான் பிறீயை வென்றார் போத்தாஸ்

Editorial   / 2019 ஏப்ரல் 29 , பி.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸார்பைஜான் குரான் பிறீயை, மெர்சிடீஸ் அணியின் பின்லாந்து ஓட்டுநரான வல்ட்டேரி போத்தாஸ் வென்றுள்ளார்.

நேற்று இடம்பெற்ற குறித்த பந்தயத்தை முதலாவதாக ஆரம்பித்த வல்ட்டேரி போத்தாஸ், இப்பந்தயத்தை இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த நடப்பு ஃபோர்மியுலா வண் சம்பியனும் சக மெர்சிடீஸ் அணியின் பிரித்தானிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டனை வீழ்த்தியே வல்ட்டேரி போத்தாஸ் வென்றிருந்தார்.

அந்தவகையில், குறித்த பந்தயத்தில் இரண்டாமிடத்தை லூயிஸ் ஹமில்டன் பெற்ற நிலையில், நடப்பு ஃபோர்மியுலா வண் பருவகாலத்தின் அஸார்பைஜான் குரான் பிறீ உள்ளடங்கலாக, அவுஸ்திரேலிய குரான் பிறீ, பஹ்ரேய்ன் குரான் பிறீ, சீன குரான் பிறீ என முதல் நான்கு பந்தயங்களிலும் சாதனை ரீதியாக மெர்சிடீஸ் அணியே முதலிரண்டு இடங்களையும் பெற்றுள்ளது.

ஃபெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல் மூன்றாமிடத்தை அஸார்பைஜான் குரான் பிறீயில் பெற்றபோதும், அவரின் சக மொனாக்கோ ஓட்டுநரான சார்ள்ஸ் லெக்கலெர்க் ஐந்தாமிடத்தையே பெற்றிருந்தார்.

ஒரு கட்டத்தில், நான்காமிடத்தைப் பெற்ற றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பனைத் தாண்டி நான்காமிடத்தை சார்ள்ஸ் லெக்கலெர்க் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டபோதும், இறுதியில் அவர் ஐந்தாமிடத்தையே பெற்றிருந்தார்.

இந்நிலையில், அஸார்பைஜான் குரான் பிறீயை வென்றதன் மூலம் இவ்வாண்டு ஃபோர்மியுலா வண் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிகள் பட்டியலில் லூயிஸ் ஹமில்டனை வல்டேரி போத்தாஸ் முந்தியுள்ளார். 87 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் வல்ட்டேரி போத்தாஸ் காணப்படுகின்ற நிலையில், ஒரு புள்ளி குறைவாக 86 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் லூயிஸ் ஹமில்டன் காணப்படுகின்றார். 52 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் செபஸ்டியல் வெட்டலும், 51 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் மக்ஸ் வெர்ஸ்டப்பனும், 47 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் சார்ள்ஸ் லெக்கலெர்க்கும் காணப்படுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .