2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆண்டின் சிறந்த வீரராக கோலி

Editorial   / 2018 ஜனவரி 18 , பி.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச கிரிக்கெட் சபையின் விருதுகளில் ஆதிக்கம் செலுத்தியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராத் கோலி, ஆண்டின் சிறந்த வீரராகத் தெரிவாகியதுடன், சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் பதினொருவர் அணிக்கும் ஒருநாள் சர்வதேசப் போட்டி பதினொருவர் அணிக்கும் தலைவராகவும் தெரிவாகியுள்ளார்.

விருதுக்கான காலப்பகுதியாக, 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் 21ஆம் திகதியிலிருந்து கடந்தாண்டு இறுதி வரைக்கும் ஆறு இரட்டைச் சதங்கள் அடங்கலாக 77.80 என்ற சராசரியில் 2, 203 டெஸ்ட் ஓட்டங்களையும் ஏழு சதங்கள் அடங்கலாக 82.63 என்ற சராசரியில் 1,818 ஒருநாள் சர்வதேசப் போட்டி ஓட்டங்களையும் விராத் கோலி பெற்றிருந்தார்.

இந்நிலையில், விருதுக்கான காலப்பகுதியில், 16 போட்டிகளில், எட்டு சதங்கள், ஐந்து அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 78.12 என்ற சராசரியில் 1,875 டெஸ்ட் ஓட்டங்களைக் குவித்த அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரராகத் தெரிவாகியுள்ளார்.

இதேவேளை, ஆண்டின் சிறந்த வளர்ந்துவரும் வீரராக, பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் ஹஸன் அலி தெரிவாகியுள்ளதுடன், ஆண்டின் சிறந்த துணை அங்கத்துவ நாடு வீரராக ஆப்கானிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர் ரஷீட் கான் தெரிவாகியுள்ளார்.

இந்நிலையில், ஆண்டு சிறந்த இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி பெறுபேறாக, இங்கிலாந்துக்கெதிரான யுஸ்வேந்திர சஹால், 25 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் பதினொருவர்: டீன் எல்கர், டேவிட் வோணர், விராத் கோலி (அணித்தலைவர்), ஸ்டீவ் ஸ்மித், செட்டேஸ்வர் புஜாரா, பென் ஸ்டோக்ஸ், குயின்டன் டி கொக் (விக்கெட் காப்பாளர்), இரவிச்சந்திரன் அஷ்வின், மிற்செல் ஸ்டார்க், கஜிஸ்கோ றபடா, ஜேம்ஸ் அன்டர்சன்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டி பதினொருவர்: டேவிட் வோணர், ரோகித் ஷர்மா, விராத் கோலி (அணித்தலைவர்), பாபர் அஸாம், ஏ.பி டி வில்லியர்ஸ், குயின்டன் டி கொக், பென் ஸ்டோக்ஸ், ட்ரெண்ட் போல்ட், ஹஸன் அலி, ரஷீட் கான், ஜஸ்பிரிட் பும்ரா.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .