2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆப்கானிஸ்தானின் முதலாவது டெஸ்ட் இன்று

Editorial   / 2018 ஜூன் 14 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் பெங்களூரில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள ஒற்றை டெஸ்டில் எதிர்கொள்வதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் காலடி எடுத்து வைக்கின்றது.

கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்து பத்தாண்டுகளில் ஆப்கானிஸ்தானுக்கு துரித வளர்ச்சியை வழங்கியதில் பெரும்பாலான பங்களிப்பை வழங்கிய அவ்வணியின் சுழற்பந்துவீச்சாளர்களே இப்போட்டியில் அவ்வணியின் ஆயுதமாக விளங்கவுள்ளனர்.

இந்தியாவுக்கு என்னதான் சொந்த மண்ணாக விளங்குகின்றபோதும் தமது குறிப்பிடத்தக்களவான போட்டிகளை இந்தியாவிலேயே ஆப்கானிஸ்தான் விளையாடியுள்ளதுடன், இந்திய வீரர்கள் கடந்த காலங்களில் சுழற்பந்துவீச்சுக்கு தடுமாறிமையும் ஆப்கானிஸ்தான் அணிக்கு சாதகமான விடயங்களாக நோக்கப்படுகின்றன.

எவ்வாறெனினும் பெங்களூர் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கே ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதுவும் இங்கிலாந்தில் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடவுள்ள நிலையில், பெங்களூர் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதமாக அமையக்கூடிய அதிக சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில், இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றிருப்பது மேலும் உறுதித் தன்மையை துடுப்பாட்ட வரிசைக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு, லோகேஷ் ராகுலுக்கு மேலாக ஷீகர் தவானும் முரளி விஜயுமே ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானில், மொஹமட் ஷஷாட் தனித்து துடுப்பாட்ட வீரராக மாத்திரமே விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், ரஷீட் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் மொஹமட் நபியுடன் சுழற்பந்துவீச்சுக் கூட்டணியை அமைப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .