2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஆர்சனலுக்கான அபுமெயாங்கின் நகர்வு அந்தரத்தில்

Editorial   / 2018 ஜனவரி 30 , பி.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பொரிசியா டொட்டமுண்டின் முன்கள வீரரான பியரி எம்ரிக் அபுமெயாங், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலில் ஒப்பந்தம் செய்யப்படுவது அந்தரத்தில் காணப்படுகிறது. ஏனெனில், இந்த வீரர் பரிமாற்றமானது வேறு இரண்டு வீரர் பரிமாற்றத்திலும் தங்கிக் காணப்படுகிறது.

குறிப்பாக, 28 வயதான பியர் எம்ரிக் அபுமெயாங்கை கைச்சாத்திடுவதற்கான தொகைக்கு பொரிசியா டொட்டமுண்டுடன் ஆர்சனல் இணங்கியுள்ளதுடன், கபொன் தேசிய கால்பந்தாட்ட அணியினதும் முன்கள வீரரான பியரரி எம்ரிக் அபுமெயாங்குடன் தனிப்பட்ட நிபந்தனைகளிலும் ஆர்சனல் இணங்கியுள்ளது.

எவ்வாறெனினும், தங்களுக்குப் பிரதியீடொன்று கிடைத்தாலே பியர் எம்ரிக் அபுமெயாங் ஆர்சலுக்குச் செல்வதற்கு பொரிசியா டொட்டமுண்ட் அனுமதிக்கும்.

இந்நிலையில், குறித்த பிரதியீடாக ஆர்சனலின் முன்கள வீரர் ஒலிவர் ஜிரோட்டைப் பெற பொரிசியா டொட்டமுண்ட் பெற விரும்புகிறது. ஆயினும் 31 வயதான ஒலிவர் ஜிரோட் ஐக்கிய இராச்சியத் தலைநகர் இலண்டனிலேயே இருக்க விரும்புகிறார்.

இச்சந்தர்ப்பத்தில், இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களான செல்சி, பிரான்ஸ் தேசிய கால்பந்தாட்ட அணியினதும் முன்கள வீரரான ஒலிவர் ஜிரோட்டை கைச்சாத்திட விரும்புகிறது.

இத்தையகயதோர் நிலையில், செல்சியின் முன்கள வீரரான மிச்சி பச்சுவாயைக் கைச்சாத்திட பொரிசியா டொட்டமுண்ட் விரும்புவதாகக் கூறப்படுகிறது.

மேற்குறித்த வீரர் பரிமாற்றம் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதாக இருக்கையில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸின் முன்கள வீரரான பெர்ணான்டோ லொரென்டேயை மிச்சி பச்சுவாயுடன் பரிமாறுவது தொடர்பிலும் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸுடன் செல்சி பேச்சுவார்த்தையை மேற்கொண்டிருந்தது.

ஆயினும், தொடர்ச்சியாக அணியில் இடம்பெற விரும்பும் மிச்சி பச்சுவாய், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸுக்கு செல்ல விரும்ப மாட்டார். ஏனெனில், அங்கு ஹரி கேன் தனது இடத்தை நிலைநிறுத்தியவாறு காணப்படுகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X