2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆர்ஜென்டீனாவை வென்றது நைஜீரியா

Editorial   / 2017 நவம்பர் 15 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச சிநேகபூர்வ போட்டியொன்றில், ஆர்ஜென்டீனாவை நைஜீரியா வென்றுள்ளது. நேற்று  இடம்பெற்ற இப்போட்டியில், 4-2 என்ற கோல் கணக்கில், நைஜீரியாவை ஆர்ஜென்டீனா வென்றுள்ளது. நைஜீரியா சார்பாக, அலெக்ஸ் இவோபி இரண்டு கோல்களையும் கெலெச்சி லெஹாஞ்சோ, பிரயான் இடோவு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். ஆர்ஜென்டீனா சார்பாக, எவெர் பனீகா, சேர்ஜியோ அகுரோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

நடப்பு உலக சம்பியன்களான ஜேர்மனி மற்றும் பிரான்ஸுக்கிடையே இடம்பெற்ற போட்டியில், இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. பிரான்ஸ் சார்பாகப் பெறப்பட்ட கோல்கள் இரண்டையும் அலெக்ஸான்ட்ரே லகஸ்ரே பெற்றார். ஜேர்மனி சார்பாக, டிமோ வேனர், லார்ஸ் ஸ்டின்டில் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

ஸ்பெய்ன், அடுத்தாண்டு கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை நடாத்தவுள்ள ரஷ்யா ஆகியவற்றுக்கிடையிலான போட்டியிலும் இரண்டு அணிகளும் தலா மூன்று கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. ஸ்ப்யென் சார்பாக, அவ்வணியின் தலைவர் சேர்ஜியோ றாமோஸ் இரண்டு கோல்களையும் ஜோர்டி அல்பா ஒரு கோலையும் பெற்றனர். ரஷ்யா சார்பாக, பயொடொர் ஸ்மொலொவ் இரண்டு கோல்களையும் அலெக்ஸி மிராஞ்சுக் ஒரு கோலையும் பெற்றனர்.

பிரேஸில், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

நடப்பு யூரோ சம்பியன்களான போர்த்துக்கல் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றுகிடையேயான போட்டியில், இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. போர்த்துக்கல் சார்பாகப் பெறப்பட்ட கோலை விட்டொரினோ அந்துனெஸ் பெற்றதோடு, ஐக்கிய அமெரிக்கா சார்பாகப் பெறப்பட்ட கோலை வெஸ்டர் மக்கென்னி பெற்றார்.

ஒஸ்திரியா, 2-1 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வென்றது. ஒஸ்திரியா சார்பாக, மார்செல் சபிட்ஸர், லூயிஸ் ஸஹயுப் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். உருகுவே சார்பாகப் பெறப்பட்ட கோலை எடின்சன் கவானி பெற்றார்.

பெல்ஜியம், 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வென்றது. பெல்ஜியம் சார்பாகப் பெறப்பட்ட கோலை றொமேலு லுக்காக்கு பெற்றிருந்தார்.

நெதர்லாந்து, 3-0 என்ற கோல் கணக்கில் றோமானியாவை வென்றது. நெதர்லாந்து சார்பாக, மெம்பிஸ் டிபே, றயான் பபெல், லூக் டி ஜொங் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

கொலம்பியா, 4-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வென்றது. கொலம்பியா சார்பாக மிக்கேல் பொர்ஜா இரண்டு கோல்களையும் பிலிப்பி பார்டோ, கார்லோஸ் பக்கா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .