2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆர்ஜென்டீனாவை வென்றது பிரேஸில்

Editorial   / 2018 ஒக்டோபர் 17 , பி.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி அரேபியாவில் நேற்று இடம்பெற்ற சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியொன்றில் 1-0 என்ற கோல் கனக்கில் ஆர்ஜென்டீனாவை பிரேசில் வென்றது. பிரேசில் சார்பாகப் பெறப்பட்ட கோலை மிரான்டா பெற்றிருந்தார்.

இந்நிலையில், பெல்ஜியத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற பெல்ஜியம், நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்த நிலையில் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. பெல்ஜியம் சார்பாகப் பெறப்பட்ட கோலை ட்ரைஸ் மேர்ட்டன்ஸும் நெதர்லாந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை அர்னோத் குறோவிகாட் பெற்றிருந்தார்.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற ஜப்பானுடனான சிநேகபூர்வ போட்டியில் 3-4 என்ற கோல் கணக்கில் உருகுவே தோல்வியடைந்ததோடு, இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்ற போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் சிலியிடம் மெக்ஸிக்கோ தோல்வியடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .