2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆறாமிடத்தில் மோர்கல், ஏழாமிடத்தில் போல்ட்

Editorial   / 2018 மார்ச் 28 , பி.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், தென்னாபிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் மோர்னி மோர்கல் ஆறாமிடத்துக்கும் நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் ஏழாமிடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் ஒன்பது விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மோர்னி மோர்கல், 11ஆம் இடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி ஆறாமிடத்தைப் பிடித்துள்ளார்.

இதேவேளை, இங்கிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் ஒன்பது விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ட்ரெண்ட் போல்ட், 12ஆம் இடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தைப் பிடித்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பின்வருமாறு, 1. கஜிஸோ றபாடா, 2. ஜேம்ஸ் அன்டர்சன், 3. இரவீந்திர ஜடேஜா, 4. இரவிச்சந்திரன் அஷ்வின், 5. ஜொஷ் ஹேசில்வூட், 6. மோர்னி மோர்கல், 7. ட்ரெண்ட் போல்ட், 8. நீல் வக்னர், 9. வேர்ணன் பிலாந்தர், 10. ரங்கன ஹேரத்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .