2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஆறாவது தடவையாக ஹமில்டன் வென்றார்

Editorial   / 2017 ஜூன் 13 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனேடியன் கிரான்ட் பிறிக்ஸில், ஆரம்பம் முதல் இறுதி வரை முழுமையாக ஆதிக்கம் செலுத்திய, மெர்டிசிடிஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன், கனேடியன் கிரான்ட் பிறிக்ஸில், தனது ஆறாவது வெற்றியைப் பெற்றுக் கொண்டார்.  

தனது ஆதர்ச நாயகனான அயூட்டன் செனாவின், 65 பந்தயங்களை முதலிடத்தில் ஆரம்பித்ததை, கடந்த சனிக்கிழமை (03) சமப்படுத்தியிருந்த ஹமில்டனுக்கு, இது 10ஆவது பந்தயம் என்ற நிலையிலேயே, அவற்றில் ஆறில் வெற்றிபெற்றுள்ளார்.  

பந்தயத்தை ஐந்தாவதாக ஆரம்பித்த றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பன், அபாரமாக காரைச் செலுத்தி, பந்தயத்தை இரண்டாவதாக ஆரம்பித்த பெராரி அணியின், ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டலையே முந்தினார்.

எனினும், ஹமில்டன் அதிவேகமாக காரைச் செலுத்தியதோடு, பின்னர், 11ஆவது சுற்றில், இயந்திரக் கோளாறால், வெர்ஸ்டப்பன் விலக, இரண்டாமிடத்துக்கு வந்த, சக மெர்சிடிஸ் அணி ஓட்டுநரான பின்லாந்தின் வல்ட்டேரி போத்தாஸை விடவும் வேகமாக காரைச் செலுத்தியே, ஹமில்டன் வெற்றிபெற்றிருந்தார்.  

இப்பந்தயத்தில், இரண்டாமிடத்தை போத்தாஸ் பெற்றதோடு, மூன்றாமிடத்தை, றெட் புல் அணியின் அவுஸ்திரேலிய ஓட்டுநரான டானியல் றிச்சியார்டோ பெற்றார்.  

நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற மேற்படி பந்தயத்தில், ஹமில்டனுக்கு பின்னால் காணப்பட்ட கடுமையான போட்டி காரணமாக, இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள வெட்டல், இப்பந்தயத்தில்,  நான்காமிடத்தையே பெற்ற நிலையில், தனக்கும் வெட்டலுக்குமிடையிலான சம்பியன்ஷிப் புள்ளிகள் வித்தியாசத்தை, 12 ஆக ஹமில்டன் குறைத்துக் கொண்டார்.  

பந்தயத்தின் ஆரம்பத்தில், வெர்ஸ்டப்பனினால், வெட்டலின் காரின் முன்பகுதி சேதமடையை, அதை மாற்றி, பின் பந்தயத்தில் மீள நுழையும்போது, இறுதி இடத்தில், 18ஆவதாகவே வெட்டல் நுழைந்திருந்தார்.  

எவ்வாறெனினும், இரண்டு நிறுத்த மூலோபாயத்தில், ஆக்ரோஷமான சில முந்தல்கள் மீண்டிருந்த வெட்டல், மூன்றாமிடத்துக்கான போட்டியில் சிக்கிக் கொண்டிருந்தார். பந்தயம் முடிவடைவதற்கு ஏழு சுற்றுக்கள் இருக்கும்போது, ஃபோர்ஸ் இந்தியா அணியின் பிரான்ஸ் ஓட்டுநரான எஸ்டீபன் ஒக்குனை முந்திய வெட்டல், இரண்டு சுற்றுக்கள் இருக்கையில், ஃபோர்ஸ் இந்தியா அணியின் மற்றைய ஓட்டுநரான, மெக்ஸிக்கோவின் சேர்ஜியோ பெரேஸை முந்தி, நான்காமிடத்தைப் பெற்றார். இப்பந்தயத்தின் முடிவில், சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில், 141 புள்ளிகளுடன், முதலிடத்தில் வெட்டல் உள்ளதுடன், 129 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஹமில்டன் உள்ளதுடன், 93 புள்ளிகளுடன் போத்தாஸ் மூன்றாமிடத்தில் உள்ளார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .