2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா?

Editorial   / 2018 ஜனவரி 24 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி, ஜொஹன்னஸ்பேர்க்கில் இலங்கை நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முதலிரண்டு போட்டிகளிலும் ஏற்கெனவே வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், இப்போட்டியிலாவது இந்தியா ஆறுதல் வெற்றியைப் பெற்றுக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

வேகப்பந்துவீச்சே முதலிரண்டு போட்டிகளிலும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போட்டிக்கான ஆடுகளம் முற்றுமுழுதாக வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்றே கருதப்படுகிறது.

எனவே, மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு மைதானம் ஒத்துழைக்கும் எனக் கருதப்படுகையில், இரண்டு அணிகளிலும் சுழற்பந்துவீச்சாளர்களுக்க்குப் பதிலாக மேலதிகமாக துடுப்பாட்ட வீரர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, கடந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் காப்பாளராகக் கடமையாற்றிய பார்த்திவ் பட்டேல் பிடியெடுப்புகளைத் தவறவிட்டிருந்த நிலையில், குழாமுக்குள் அழைக்கப்பட்டுள்ள தினேஷ் கார்த்திக் அவரை பிரதியீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, லோகேஷ் ராகுலை ஷீகர் தவான் பிரதியீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுவதுடன், இரவிச்சந்திரன் அஷ்வினை புவ்னேஷ்வர் குமார் பிரதியீடு செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுவதுடன், ரோகித் ஷர்மாவை அஜின்கியா ரஹானே பிரதியீடு செய்வார் என்றும் கருதப்படுகிறது.

இந்நிலையில், தென்னாபிரிக்க அணியில் பெரிதாக மாற்றமேதும் மேற்கொள்ளப்படாது என்று எதிர்பார்க்கப்படுகின்றபோதும் சுழற்பந்துவீச்சாளர் கேஷவ் மஹராஜ்ஜை, மேலதிக துடுப்பாட்ட வீரர் தெனியுஸ் டி ப்ரூன் பிரதியீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் தென்னாபிரிக்க அணி: டீன் எல்கர், ஏய்டன் மர்க்ரம், ஹஷிம் அம்லா, ஏ.பி டி வில்லியர்ஸ், பப் டு பிளெஸி (அணித்தலைவர்), தெனியுஸ் டி ப்ரூன், குயின்டன் டி கொக் (விக்கெட் காப்பாளர்), வேர்ணன் பிலாந்தர், கஜிஸோ றபடா, மோர்னி மோர்கல், லுங்கி என்கிடி.

எதிர்பார்க்கப்படும் இந்திய அணி: முரளி விஜய், ஷீகர் தவான், செட்டேஸ்வர் புஜாரா, விராத் கோலி (அணித்தலைவர்), அஜின்கியா ரஹானே, தினேஷ் கார்த்திக் (விக்கெட் காப்பாளர்), ஹர்டிக் பாண்டியா, புவ்னேஷ்வர் குமார், இஷாந்த் ஷர்மா, மொஹமட் ஷமி, ஜஸ்பிரிட் பும்ரா. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .