2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஆஷஸ் தொடர் ஆரம்பமாகின்றது நாளை

Editorial   / 2017 நவம்பர் 22 , பி.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடர், பிறிஸ்பேணில் நாளை அதிகாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும் முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடராக இருக்கின்றபோதும் சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் இத்தொடர் ஓரிரு இட மாற்றங்களை மட்டுமே ஏற்படுத்துமென்ற போதும் இரண்டு நாடுகளிலும் மிகப் பெரிதாக நோக்கப்படுகின்ற தொடர், ஒரு வீரரை உச்சத்தையடைய வைப்பதாகவும் வீரரொருவரின் விளையாடும் காலத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலும் இருப்பதால், இரண்டு அணிகளாலும் இத்தொடர் மிகக் கவனமாக நோக்கப்படுகிறது.

அதிலும், அவுஸ்திரேலியாவில் கடந்த முறை இடம்பெற்ற ஆஷஸ் தொடரின்போது, உயர்ந்து சீறி வரும் பந்தால் முதல் போட்டியிலேயே அச்சமடைந்த இங்கிலாந்து வீரர்கள் அத்தொடர் முழுவதும் தடுமாறியிருந்தனர்.

ஆக, பிறிஸ்பேண் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கக்கூடிய வகையில் கடினமாக இருப்பதாகக் கூறப்படுகின்ற நிலையில், வேகமாகப் பந்துவீசுகின்ற அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான மிற்செல் ஸ்டார்க், பற் கமின்ஸ் ஆகியோரை இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதிலேயே இத்தொடரின் போக்கு அமையவுள்ளது.

இந்நிலையில், கழுத்துப் பகுதியில் உபாதைக்குள்ளான அவுஸ்திரேலிய அணியின் உப அணித்தலைவரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான டேவிட் வோணர் குணமடையாத பட்சத்தில், அவருக்குப் பதிலாக அணியில் இடம்பெறுவதற்காக கிளென் மக்ஸ்வெல் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, டேவிட் வோணர் விளையாடாத பட்சத்தில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக ஷோர்ன் மார்ஷே களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்றைய பயிற்சியின்போது முதுகுப் பகுதியில் உபாதைக்குள்ளாகியமை அவுஸ்திரேலியாவை சிக்கலுக்குளாக்கியுள்ளது.

இந்நிலையில், இரண்டு அணிகளும் முதலாவது போட்டியில் விளையாடும் பதினொருவரை அறிவித்திருந்தன. அவ்விபரம் கீழ்வருமாறு

அவுஸ்திரேலியா: கமரோன் பன்குரோப்ட், டேவிட் வோணர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித் (அணித்தலைவர்), பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப், ஷோர்ன் மார்ஷ், டிம் பெய்ன் (விக்கெட் காப்பாளர்), மிற்செல் ஸ்டார்க், பற் கமின்ஸ், நேதன் லையன், ஜொஷ் ஹேசில்வூட்.

இங்கிலாந்து: அலிஸ்டியர் குக், மார்க் ஸ்டோன்மன், ஜேம்ஸ் வின்ஸ், ஜோ றூட் (அணித்தலைவர்), டேவிட் மலன், மொயின் அலி, ஜொனி பெயார்ஸ்டோ (விக்கெட் காப்பாளர்), கிறிஸ் வோக்ஸ், ஜேக் போல், ஸ்டூவேர்ட் ப்ரோட், ஜேம்ஸ் அன்டர்சன்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .