2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆஸியின் பயிற்றுவிப்பாளராக லீமனைப் பிரதியீடு செய்கிறார் லாங்கர்

Editorial   / 2018 ஏப்ரல் 19 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் டரன் லீமனை, அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் பிரதியீடு செய்வார் எனக் கூறப்படுகிறது.

நாளை கூடவுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை, அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஜஸ்டின் லாங்கரை நியமிக்கும் நடைமுறைகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கருத்துத் தெரிவித்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் பேச்சாளரொருவர், அடுத்த மாத ஆரம்பத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் நியமனம் இடம்பெறுமெனக் கூறியுள்ளார். மேலும் கருத்துத் தெரிவித்த குறித்த பேச்சாளர், ஒருவருக்கும் பதவி இன்னும் வழங்கப்படவில்லையெனக் கூறியதுடன், எந்தவொரு ஒப்பந்தமும் உருவாக்கப்படவில்லையெனத் தெரிவித்துள்ளார்.

அனைத்து வகையான போட்டிகளுக்கும் ஜஸ்டின் லாங்கரே பயிற்சியாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கு வேறு பயிற்சியாளரை நியமிப்பதாக இருந்தால், அதற்கு, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொன்டிங் அல்லது அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜேஸன் கிலெஸ்பி நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .