2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இங்கிலாந்தை வென்ற இந்தியா

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 25 , பி.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்துக்கெதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அஹமதாபாத்தில் நேற்று ஆரம்பமான மூன்றாவது டெஸ்டில் இந்தியா இன்று வென்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில், ஸக் குறொலி 53, அணித்தலைவர் ஜோ றூட் 17, பென் போக்ஸ் 12, ஆர்ச்சர் 11 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அக்ஸர் பட்டேல் ஆறு, இரவிச்சந்திரன் அஷ்வின் மூன்று, இஷாந்த் ஷர்மா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, சகல விக்கெட்டுகளையும் இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ரோஹித் ஷர்மா 66, அணித்தலைவர் விராட் கோலி 27, இரவிச்சந்திரன் அஷ்வின் 17, இஷாந்த் ஷர்மா ஆட்டமிழக்காமல் 10 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜோ றூட் ஐந்து, ஜேக் லீச் நான்கு, ஜொஃப்ரா ஆர்ச்சர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, சகல விக்கெட்டுகளையும் இழந்து 81 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில், பென் ஸ்டோக்ஸ் 25, ஜோ றூட் 19, ஒலி போப் 12 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அக்ஸர் பட்டேல் ஐந்து, இரவிச்சந்திரன் அஷ்வின் நான்கு, வொஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

குறித்த இனிங்ஸில் தனது மூன்றாவது விக்கெட்டாக ஜொஃப்ரா ஆர்ச்சரின் விக்கெட்டைக் கைப்பற்றும்போது, தனது 400ஆவது விக்கெட்டை இரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் போட்டிகளில் கைப்பற்றினார்.

பதிலுக்கு, 49 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், ரோஹித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 25, ஷுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 15 ஓட்டங்களைப் பெற்றனர்.

இப்போட்டியின் நாயகனாக அக்ஸர் பட்டேல் தெரிவானார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .