2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா: வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது டெஸ்ட்

Editorial   / 2019 ஜூலை 22 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, அவுஸ்திரேலிய பெண்கள் அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரில், டெளண்டனில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகிய ஒற்றை டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நேற்று முடிவடைந்திருந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா: 420/8 (துடுப்பாட்டம்: எலைஸ் பெரி 116, றேச்சல் ஹெய்ன்ஸ் 87, அலைஸா ஹீலி 58, மெக் லன்னிங் 57, பெத் மூனி 51 ஓட்டங்கள். பந்துவீச்சு: கதரின் ப்ரண்ட் 2/48, சோபி எக்கில்ஸ்டோன் 2/90, லோரா மார்ஷ் 2/90, கிறிஸ்டி கோர்டன் 1/69, நட்டாலி ஷிவர் 1/44)

இங்கிலாந்து: 275/9 (துடுப்பாட்டம்: நட்டாலி ஷிவர் 88, அமி ஜோன்ஸ் 64 ஓட்டங்கள். பந்துவீச்சு: சோபி மொலினெக்ஸ் 4/95, ஜெஸ் ஜொனாசென் 2/50, அஷ்லெய் கார்ட்னர் 1/36, எலைஸ் பெரி 1/44)

அவுஸ்திரேலியா: 230/7 (துடுப்பாட்டம்: எலைஸ் பெரி ஆ.இ 76, சோபி மொலினெக்ஸ் 41, ஜெஸ் ஜொனாசென் 37 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹீதர் நைட் 2/25, லோரா மார்ஷ் 2/42, கிறிஸ்டி கோர்டன் 2/50, சோபி எக்கில்ஸ்டோன் 1/37)

போட்டியின் நாயகி: எலைஸ் பெரி

அந்தவகையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், ஒற்றை டெஸ்ட், மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை உள்ளடக்கிய ஆஷஸை, நடப்புச் சம்பியன்களான அவுஸ்திரேலியா தக்க வைத்துள்ளது.

ஏனெனில், இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பதாக நடந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் 3-0 என இங்கிலாந்தை வெள்ளையடித்து 6-0 என்ற புள்ளிகள் கணக்கின் முன்னிலையிலிருந்த அவுஸ்திரேலியா, தற்போது டெஸ்ட் வெற்றிதோல்வின்றி முடிவடைந்ததைத் தொடர்ந்து 8-2 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

அந்தவகையில், இடம்பெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் 3-0 என அவுஸ்திரேலியாவை இங்கிலாந்து வெள்ளையடித்தாலும் எட்டுப் புள்ளிகளைப் பெற்று புள்ளிகளை சமப்படுத்த மாத்திரமே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .