2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இங்கிலாந்து பிறீமியர் லீக்: ஆர்சனல் – யுனைட்டெட் போட்டி சமநிலை

Editorial   / 2019 ஒக்டோபர் 01 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற ஆர்சனலுடனான போட்டியை சமநிலையில் மன்செஸ்டர் யுனைட்டெட் முடித்துக் கொண்டிருந்தது.

இப்போட்டியின் முதற்பாதி முடிவில் ஆர்சனலின் முன்களவீரர் புக்காயோ சாகாவின் கோல் கம்பத்தை நோக்கி தாழ்வாக வந்த உதையை மன்செஸ்டர் யுனைட்டெட்டின் கோல் காப்பாளர் டேவிட் டி கியா தடுத்ததுடன், அதனைத் தொடர்ந்து ஆர்சனலின் மத்தியகளவீரர் மட்டியோ குன்டோஸியின் உதையையும் டேவிட் டி கியா தடுத்திருந்தார்.

இந்நிலையில், மேற்படி தருணத்துக்கு அடுத்த தருணத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்களவீரர் மார்க்கஸ் றஷ்ஃபோர்ட் வழங்கிய பந்தை மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மத்தியகளவீரர் ஸ்கொட் மக்டொமினி கோலாக்க முதற்பாதி முடிவில் மன்செஸ்டர் யுனைட்டெட் முன்னிலையில் இருந்தது.

எவ்வாறெனினும், போட்டியின் 58ஆவது நிமிடத்தில் புக்காயோ சாகாவிடம்  மன்செஸ்டர் யுனைட்டெட்டின் பின்களவீரர் அக்ஸெல் டுவான்ஸெபே பந்தை இழந்தநிலையில், அவர் அப்பந்தை ஆர்சனலின் பியரி-எம்ரிக் அபுமெயாங்கிடம் வழங்க அவர் அதைக் கோலாக்கி கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார். அந்தவகையில் பியரி-எம்ரிக் அபுமெயாங்க் கோல் கம்பத்துக்குள் பந்தைச் செலுத்தும் முதலே ஓஃப் சைட் என உதவி மத்தியஸ்தரால் கொடி காண்பிக்கப்பட்டிருந்தபோதும், காணொளி உதவி மத்தியஸ்தர் மீளாய்வில் மன்செஸ்டர் யுனைட்டெட்டின் பின்களவீரர் ஹரி மக்குவாயாவால் பியரி-எம்ரிக் அபுமெயாங் ஒன் சைட்டில் இருந்தது புலப்பட்டிருந்து குறித்த கோல் அணுமதிக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர், மன்செஸ்டர் யுனைட்டெட்டின் பின்களவீரரும் அணித்தலைவருமான அஷ்லி யங்கின் மூலையுதையொன்றின் மூலம் கோல் கம்பத்தை நோக்கி ஸ்கொட் மக்டொமினி தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்துக்கு மேலால் சென்றதுடன், ஹரி மக்குவாயாவின் கோல் கம்பத்தை நோக்கிய உதையை ஆர்சனலின் கோல் காப்பாளர் பேர்ண்ட் லெனோ தடுத்ததுடன், இறுதி நிமிட மார்க்கஸ் றஷ்ஃபோர்ட்டின் பிறீ கிக்கையும் தடுத்திருந்த நிலையில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .