2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இங்கிலாந்து பிறீமியர் லீக்: நடப்புச் சம்பியன்களுக்கு அடி

Editorial   / 2019 ஜனவரி 30 , பி.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி மீண்டும் சம்பியனானவதற்கான பயணத்தில் மேலுமொரு அடியைச் சந்தித்துள்ளது.

நியூகாசில் யுனைட்டெட் அணியின் மைதானத்தில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் தோல்வியைத் தளுவியதன் மூலமே மீண்டும் சம்பியனானவதற்கான பயணத்தில் மேலுமொரு அடியை மன்செஸ்டர் சிற்றி சந்தித்துள்ளது.

இப்போட்டியின் முதலாவது நிமிடத்திலேயே, சக முன்கள வீரர் ரஹீம் ஸ்டேர்லிங்கிடமிருந்து பெற்ற பந்தை மன்செஸ்டர் சிற்றியின் இன்னொரு முன்கள வீரரான சேர்ஜியோ அகுரோ கோலாக்க மன்செஸ்டர் சிற்றி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

குறித்த கோலைத் தொடர்ந்து சேர்ஜியோ அகுரோ மேலுமொரு கோலைப் பெற்றபோதும், தான் சமிக்ஞையை வழங்க முன்னரே பிறீ கிக்கை கெவின் டி ப்ரூனே செலுத்தினாரென மத்தியஸ்தர் போல் டையர்னி தெரிவித்து அக்கோல் நிராகரிக்கப்பட்டது.

பின்னர், போட்டியின் 66ஆவது நிமிடத்தில், சக நியூகாசில் யுனைட்டெட் வீரர் இஸாக் ஹெய்டன் தலையால் முட்டி வழங்கிய பந்தை சலோமன் றொன்டன் கோலாக்க கோலெண்ணிக்கையை நியூகாசில் யுனைட்டெட் சமப்படுத்தியது.

இதேவேளை, 78ஆவது நிமிடத்தில் நியூகாசில் யுனைட்டெட்டின் சீன் லோங்ஸ்டாவை மன்செஸ்டர் சிற்றியின் பெர்ணானான்டின்ஹோ தடக்கி வீழ்த்தியிருந்ததுக்கு பெனால்டி வழங்கப்பட்ட நிலையில், அப்பெனால்டியை மற் றிச்சி கோலாக்கியதோடு இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் நியூகாசில் யுனைட்டெட் வென்றிருந்தது.

இந்நிலையில், தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற பேர்ண்லி அணியுடனான போட்டியில் இரண்டு கோல்கள் பின்தங்கியிருந்து வந்து இறுதி நிமிடங்களில் இரண்டு கோல்களைப் பெற்று 2-2 என்ற கோல் கணக்கில் இறுதியில் போட்டியை மன்செஸ்டர் யுனைட்டெட் சமநிலையில் முடித்துக் கொண்டது. அந்தவகையில், தமது தற்காலிக முகாமையாளர் ஒலெ குனார் சொல்க்ஜர் நியமிக்கப்பட்ட பின்னர் அவரின் முதல் எட்டுப் போட்டிகளிலும் வென்றிருந்த மன்செஸ்டர் யுனைட்டெட், இப்போட்டியிலேயே வெற்றிபெறத் தவறியிருந்தது.

இதேவேளை, தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்றுஅதிகாலை இடம்பெற்ற கார்டிப் சிற்றி அணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .