2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் மூன்றாமிடத்துக்கு முன்னேறியது செல்சி

Editorial   / 2019 ஏப்ரல் 09 , பி.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரின் புள்ளிகள் பட்டியலில் மூன்றாமிடத்துக்கு செல்சி முன்னேறியுள்ளது.

தமது மைதானத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டுக்கெதிரான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இங்கிலாந்து பீறீமியர் லீக் தொடரின் புள்ளிகள் பட்டியலில் மூன்றாமிடத்துக்கு செல்சி முன்னேறியுள்ளது.

வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் அரைப் பகுதிக்கு சற்று வெளியே பந்தைப் பெற்ற செல்சியின் நட்சத்திர முன்களவீரரான ஈடின் ஹஸார்ட், அவ்வணியின் ஐந்து வீரர்களைத் தாண்டி போட்டியின் 24ஆவது நிமிடத்தில் பெற்ற அபராமன கோலின் மூலம் செல்சி முன்னிலை பெற்றிருந்ததுடன், போட்டியின் இறுதி நிமிடத்தில் அவர் பெற்ற இன்னொரு கோலுடன் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது.

ஈடின் ஹஸார்ட் முதலாவது கோல் பெற்றதைத் தொடர்ந்து அவர் வழங்கிய பந்தொன்றை கோல் கம்பத்தை நோக்கி செல்சியின் இன்னொரு முன்களவீரரான கொன்ஸலோ ஹியூகைன் உதைந்திருந்தபோதும், அது கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்தது. இதுதவிர, இதைத் தொடர்ந்து, வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் முன்களவீரர் மார்கோ அர்னோடோவிச்சால் பெனால்டி பகுதிக்குள் வைத்து ஈடின் ஹஸார்ட் வீழ்த்தப்பட்டபோதும், அதற்கு பெனால்டி வழங்கப்பட்டிருக்கவில்லை.

அந்தவகையில், ஈடின் ஹஸார்ட் தவிர, செல்சியின் இளம் முன்களவீரரான கலும் ஹட்சன் ஒடோய், மத்தியகள வீரர் என்கலோ கன்டேயும் இப்போட்டியில் சிறப்பாக விளையாடியிருந்தனர்.

இப்போட்டியில் பெற்ற வெற்றியுடன் 66 புள்ளிகளைப் பெற்றுள்ள செல்சி, இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் ஐந்தாமிடத்திலிருந்து மூன்றாமிடத்துக்கு முன்னேறியுள்ளது. நான்காமிடத்தில் 64 புள்ளிகளுடன் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரும், ஐந்தாமிடத்தில் 63 புள்ளிகளுடன் ஆர்சனலும் காணப்படுகின்றபோதும் அவையிரண்டு தலா ஒவ்வொரு போட்டி செல்சியை விட குறைவாக விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .