2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்து பிறீமியர் லீக்: மன்செஸ்டர் சிற்றி வென்றது

Editorial   / 2017 ஓகஸ்ட் 14 , மு.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டிகளில், மன்செஸ்டர் சிற்றி வென்றதுடன், நடப்பு பிறீமியர் லீக் சம்பியன்கள் செல்சி தோல்வியைத் தளுவியுள்ளது.

மன்செஸ்டர் சிற்றி, 2-0 என்ற கோல் கணக்கில், பிறீமியர் லீக்குக்குப் புதிதாகத் தரமுயர்த்தப்பட்ட பிறைட்டனை வென்றது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, சேர்ஜியோ அக்ரோ ஒரு கோலைப் பெற்றதுடன், லீவிஸ் டங்கின் “ஒவ்ண் கோல்” மூலம் மற்றைய கோலைப் பெற்றது.

செல்சி, 2-3 என்ற கோல் கணக்கில் பேர்ண்லியிடம் தோற்றிருந்தது. பேர்ண்லி சார்பாக, சாம் வோக்ஸ் இரண்டு கோல்களையும் ஸ்டீபன் வோர்ட் ஒரு கோலையும் பெற்றனர். செல்சி சார்பாக, அல்வரோ மொராட்டா, டேவிட் லூயிஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

லிவர்பூல், வட்போர்ட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. லிவர்பூல் சார்பாக, சாடியோ மனே, றொபேர்ட்டோ ஃபெர்மினோ, மொஹமட் சாலா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். வட்போர்ட் சார்பாக, ஸ்டெபனோ ஒககா, அப்துல்லாயி டுரே, மைகல் பிறிட்டோஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இப்பருவகால பிறீமியர் லீக்கின் ஆரம்பப் போட்டியில், 4-3 என்ற கோல் கணக்கில், லெய்செஸ்டர் சிற்றியை ஆர்சனல் வென்றது. ஆர்சனல் சார்பாக, அலெக்ஸான்டர் லகஸ்ரே, டனி வெல்பக், ஆரோன் றாம்ஸி, ஒலிவர் ஜிரோட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். லெய்செஸ்டர் சிற்றி சார்பாக, ஜேமி வார்டி இரண்டு கோல்களையும் ஷின்ஜி ஒகஸாகி ஒரு கோலையும் பெற்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X