2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இங்கிலாந்து பிறீமியர் லீக்: வெஸ்ட் ஹாமை வீழ்த்தியது சிற்றி

Editorial   / 2019 ஓகஸ்ட் 11 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையேயான பிறீமியர் லீக் தொடரானதுநேற்று முன்தினம் ஆரம்பித்திருந்த நிலையில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் ஆகியன வென்றிருந்தன.

வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் மைதானத்தில் இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வென்றிருந்தது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, ரஹீம் ஸ்டேர்லிங் மூன்று கோல்களையும், கப்ரியல் ஜெஸூஸ், சேர்ஜியோ அகுரோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.

இந்நிலையில், தமது மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் அஸ்தன் வில்லாவை டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வென்றிருந்தது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாக ஹரி கேன் இரண்டு கோல்களையும், டாங்கி என்னொம்பலே ஒரு கோலையும் பெற்றனர்.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற எவெர்ற்றனுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் கிறிஸ்டல் பலஸ் முடித்துக் கொண்டது.

இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நடப்பு பிறீமியர் லீக் பருவகாலத்தின் ஆரம்பப் போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் நோர்விச் சிற்றியை லிவர்பூல் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. லிவர்பூல் சார்பாக, மொஹமட் சாலா, வேர்ஜில் வான் டிஜிக், டிவோக் ஒரிஜி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, ஓவ்ண் கோல் முறையில் ஒரு கோல் கிரான்ட் ஹன்லி மூலமாகப் கிடைக்கப் பெற்றிருந்தது. நோர்விச் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை டீமு புக்கி பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .