2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இங்கிலாந்துக் குழாமில் ஒலி போப்

Editorial   / 2018 ஓகஸ்ட் 06 , பி.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்டுக்கான இங்கிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த குழாமில் இளம் துடுப்பாட்ட வீரர் ஒலி போப் இடம்பெற்றுள்ளார்.

முதலாவது டெஸ்டுக்கான இங்கிலாந்துக் குழாமில் இடம்பெற்றிருந்த டேவிட் மலனை போப் பிரதியீடு செய்வதோடு, இன்று முதல் தனது வழக்கு விசாரணைகளை எதிர்கொள்ளும் பென் ஸ்டோக்ஸை கிறிஸ் வோக்ஸ் இரண்டாவது டெஸ்டுக்கான இங்கிலாந்துக் குழாமில் பிரதியீடு செய்துள்ளார்.

முதலாவது டெஸ்டுக்கான குழாமில் இடம்பெற்றிருந்து போட்டியில் விளையாடியிருக்காத மொயின் அலி, ஜேமி போர்ட்டன் உட்பட முதலாவது டெஸ்டில் விளையாடிய ஏனைய வீரர்கள் அனைவரும் இரண்டாவது டெஸ்டுக்கான குழாமில் இடம்பெற்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .