2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் வெள்ளையடிக்கப்படுவதை நோக்கி இலங்கை

Editorial   / 2018 நவம்பர் 25 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 0-3 என வெள்ளையடிக்கப்படுவதை நோக்கி இலங்கை நகர்ந்து வருகிறது.

இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் தோற்று ஏற்கெனவே தொடரை இழந்துள்ள இலங்கையணி, கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான மூன்றாவது டெஸ்டின் இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 327 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடுகையில், 53 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தே வெள்ளையடிக்கப்படுவதை நோக்கி நகர்ந்து வருகிறது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ றூட், முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நிலையில், தமது புதிய மூன்றாமிலக்க வீரரான ஜொனி பெயார்ஸ்டோவின் சதம், பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், மொயின் அலி, அடில் ரஷீட்டின் பங்களிப்புடன் சகல விக்கெட்டுகளையும் இழந்து 336 ஓட்டங்களை தமது முதலாவது இனிங்ஸில் இங்கிலாந்து பெற்றது.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, 1 விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்கள் என்ற பலமான நிலையில் காணப்பட்டபோதும் இறுதி 9 விக்கெட்டுகளையும் 67 ஓட்டங்களுக்கு பறிகொட்டுத்து 240 ஓட்டங்களுக்கு அடில் ரஷீட், பென் ஸ்டோக்ஸின் பந்துவீச்சில் இழந்தது.

இதனையடுத்து தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, நேற்று ஆரம்பத்தில் டில்ருவான் பெரேராவிடம் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தபோதும் ஜொஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, பென் போக்ஸ், அடில் ரஷீட், லக்‌ஷன் சந்தகானின் முறையற்ற பந்துகளில் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டமையை பயன்படுத்தி சகல விக்கெட்டுகளையும் இழந்து 230 ஓட்டங்களைப் பெற்றது.

இந்நிலையிலேயே, 327 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடும் இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 53 ஓட்டங்களையே பெற்று தடுமாறி வருகிறது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இங்கிலாந்து: 336/10 (துடுப்பாட்டம்: ஜொனி பெயார்ஸ்டோ 110, பென் ஸ்டோக்ஸ் 57, ஜோ றூட் 46, மொயின் அலி 33, அடில் ரஷீட் ஆ.இ 21 ஓட்டங்கள். பந்துவீச்சு: லக்‌ஷன் சந்தகான் 5/95, டில்ருவான் பெரேரா 3/113, மாலிந்த புஷ்பகுமார 2/64)

இலங்கை: 240/10 (துடுப்பாட்டம்: திமுத் கருணாரத்ன 83, தனஞ்சய டி சில்வா 73 ஓட்டங்கள். பந்துவீச்சு: அடில் ரஷீட் 5/49, பென் ஸ்டோக்ஸ் 3/30)

இங்கிலாந்து: 230/10 (துடுப்பாட்டம்: ஜொஸ் பட்லர் 64, பென் ஸ்டோக்ஸ் 42, பென் போக்ஸ் ஆ.இ 36, அடில் ரஷீட் 24, மொயின் அலி 22 ஓட்டங்கள். பந்துவீச்சு: டில்ருவான் பெரேரா 5/88, மாலிந்த புஷ்பகுமார 3/28, லக்ஷன் சந்தகான் 2/76)

இலங்கை: 53/4 (பந்துவீச்சு: மொயின் அலி 2/16, ஜேக் லீச் 1/12, பென் ஸ்டோக்ஸ் 1/14)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X