2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இங்கிலாந்துக்கெதிரான நியூசிலாந்துக் குழாம் அறிவிப்பு

Editorial   / 2018 பெப்ரவரி 22 , பி.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், முதலிரண்டு போட்டிகளுக்கான நியூசிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் சுழற்பந்துவீச்சாளர் இஷ் சோதி இடம்பெற்றுள்ளதுடன், நியூசிலாந்து இறுதியாக விளையாடிய ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரான, பாகிஸ்தானுக்கெதிரான தொடருக்கான குழாமில் இடம்பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் செத் றான்ஸ், துடுப்பாட்ட வீரர் ஜோர்ஜ் வேர்கர் ஆகியோர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் இடம்பெறவில்லை.

ஹமில்டனில், இலங்கை நேரப்படி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியுடன் இத்தொடர் தொடங்குகின்றது.

குழாம்: கேன் வில்லியம்சன் (அணித்தலைவர்), டொட் அஸ்டில், ட்ரெண்ட் போல்ட், லொக்கி பெர்கியூஸன், கொலின் டி கிரான்ட்ஹொம், மார்டின் கப்தில், மற் ஹென்றி, டொம் லேதம் (விக்கெட் காப்பாளர்), கொலின் மன்றோ, ஹென்றி நிக்கொல்ஸ், மிற்செல் சான்ட்னெர், இஷ் சோதி, டிம் செளதி, றொஸ் டெய்லர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .