2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்தை வென்றது நியூசிலாந்து

Editorial   / 2018 பெப்ரவரி 25 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில், ஹமில்டனில் இன்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் 3 விக்கெட்டுகளால் நியூசிலாந்து வென்றது.

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 284 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஜொஸ் பட்லர் 79 (65), ஜோ றூட் 71 (75), ஜேஸன் றோய் 49 (66), மொயின் அலி 28 (26) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மிற்செல் சான்ட்னெர், இஷ் சோதி, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 2, கொலின் மன்றோ ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 285 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, 49.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், றொஸ் டெய்லர் 113 (116), டொம் லேதம் 79 (84), மிற்செல் சான்ட்னெர் ஆட்டமிழக்காமல் 45 (27) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 2, டேவிட் வில்லி, அடில் ரஷீட், டொம் குரான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக றொஸ் டெய்லர் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .