2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இங்கிலாந்தை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்

Editorial   / 2018 நவம்பர் 19 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது நாட்டில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் பெண்களின் உலக இருபதுக்கு – 20 தொடரில், சென். லூசியாவில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற குழு ஏ போட்டியொன்றில் இங்கிலாந்தை நடப்புச் சம்பியன்கள் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.

அந்தவகையில், இப்போட்டிக்கு முன்பாகவே அரையிறுதிப் போட்டிக்கு மேற்கிந்தியத் தீவுகளும் இங்கிலாந்தும் தகுதிபெற்றிருந்த நிலையில், இப்போட்டி முடிவைத் தொடர்ந்து குழு ஏயின் வெற்றியாளர்களாக அவுஸ்திரேலியாவை தமது அரையிறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் எதிர்கொள்ளவுள்ளதுடன், தமது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை இங்கிலாந்து எதிர்கொள்கிறது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்

இங்கிலாந்து: 115/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சோபியா டன்கிளே 35 (30), அன்யா ஷெர்ஷோபிள் 29 (26), டம்மி பெமூண்ட் 23 (28) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகெர ஷெல்மன் 2/15 [4], தெயெந்திர டொட்டின் 2/21 [4])

மேற்கிந்தியத் தீவுகள்: 117/6 (19.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: தெயெந்திர டோட்டின் 46 (52), ஷெமைன் கம்பல் 45 (42) ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்யா ஷெர்ஷோபிள் 3/10 [3.3])

போட்டியின் நாயகி: தெயெந்திர டோட்டின்

இதேவேளை, குறித்த போட்டியைத் தொடர்ந்து சென். லூசியாவில் இடம்பெற்ற இறுதி குழுநிலைப் போட்டியில் பங்களாதேஷை 30 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்

தென்னாபிரிக்கா: 109/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மரிஸன்னே கப் 25 (19), லிஸ்லி லீ 21 (13), குளோயி டைரோன் 18 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: சல்மா காட்டூன் 3/20 [4], காதீஜா துல் குப்ரா 2/18 [4])

பங்களாதேஷ்: 79/5 (20 ஓவ, ) (துடுப்பாட்டம்: ருமானா அஹமட் ஆ.இ 34 (40), பர்கானா ஹொக் 19 (36) ஓட்டங்கள். பந்துவீச்சு: மசபட்டா கிளாஸ் 1/13 [4], டேன் வான் நிக்கெரெக் 1/17 [4])

போட்டியின் நாயகி: மரிஸன்னே கப்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X