2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இங்கிலாந்தை வென்றது ஸ்கொட்லாந்து

Editorial   / 2018 ஜூன் 11 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்கொட்லாந்தின் தலைநகர் எடின்பேர்க்கில் நேற்று இடம்பெற்ற ஸ்கொட்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒற்றை ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்தை ஸ்கொட்லாந்து வென்றது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணியின் தலைவர் ஒய்ன் மோர்கன், ஸ்கொட்லாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து,  50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 371 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், கலும் மக்லியொட் ஆட்டமிழக்காமல் 140 (94), அணித்தலைவர் கைல் கொயட்ஸியர் 58 (49), ஜோர்ஜ் முன்சீ 55 (51), மத்தியூ குறொஸ் 48 (39), றிச்சி பெரிங்டன் 39 (54) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், லியம் பிளங்கட், அடில் ரஷீட் ஆகியோர் தலா 2, மார்க் வூட் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு 372 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து,  48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 365 ஓட்டங்களையே பெற்று ஆறு ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், ஜொனி பெயார்ஸ்டோ 105 (59), அலெக்ஸ் ஹேல்ஸ் 52 (56), லியம் பிளங்கெட் ஆட்டமிழக்காமல் 47 (45), மொயின் அலி 46 (33) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மார்க் வற் 3, அலஸ்டயர் இவான்ஸ், றிச்சி பெரிங்டன் ஆகியோர் தலா 2, சப்யான் ஷரீப் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக கலும் மக்லியொட் தெரிவானார்.

இந்நிலையில், ஸ்கொட்லாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேச போட்டித் தொடரின் முதலாவது போட்டி இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .