2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இந்தியா எதிர் தென்னாபிரிக்கா: 3ஆவது டெஸ்ட் நாளை ஆரம்பம்

Editorial   / 2019 ஒக்டோபர் 18 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியானது, ராஞ்சியில் இலங்கை நேரப்படி நாளை காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வென்றுள்ள இந்தியா தொடரை ஏற்கெனவே கைப்பற்றியுள்ள நிலையில் இப்போட்டியில் தோல்வியைத் தவிர்ப்பதன் மூலம் வெள்ளையடிப்பைத் தவிர்த்து சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் தமது மூன்றாமிடத்திலிருந்து நான்காமிடத்துக்கு கீழிறங்குவதைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.

தென்னாபிரிக்கா இத்தொடரை இழந்தமைக்கு துடுப்பாட்டமும், பந்துவீச்சும் காரணமென்றபோதும் பிரதானமாக துடுப்பாட்டமே காரணமாக இருந்தது. ஏய்டன் மர்க்ரம், தெனியுஸ் டி ப்ரூன், தெம்பா பவுமாவின் துடுப்பாட்டமே மோசமானதாகக் காணப்பட்ட நிலையில், இப்போட்டியில் தெனியுஸ் டி ப்ரூனை ஸுபைர் ஹம்ஸா பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுகையில், ஏய்டன் மர்க்கரமை ஹென்றிச் கிளாசென் பிரதியிடுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

இதேநேரம் தென்னாபிரிக்காவின் பந்துவீச்சும் குறிப்பிடத்தக்கதாக இல்லாததோடு, காயம் காரணமாக தமது சிரேஷ்ட சுழற்பந்துவீச்சாளரை கேஷவ் மஹராஜ்ஜை இழந்துள்ள நிலையில் இது மேலும் பின்னடைவாக இருக்கின்ற நிலையில் அவரை குழாமில் பிரதியிட்ட புதுமுக சுழற்பந்துவீச்சாளர் ஜோர்ஜ் லின்டே அணியிலும் பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர, இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் மொஹமட் ஷமி, உமேஷ் யாதவ் அளவுக்கு தென்னாபிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர்கள் வேர்ணன் பிலாந்தர், ககிஸோ றபாடா, அன்ட்றிச் நொர்ட்ஜ்ஜே பந்துவீசியிருக்காத நிலையில் அன்ட்றிச் நொர்ட்ஜேயை லுங்கி என்கிடி பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், முதலிரண்டு போட்டிகளின் ஆடுகளங்களும் தட்டையாக அமைந்திருந்த நிலையில் ராஞ்சி ஆடுகளமும் அவ்வாறே சற்று அதிகமாக சுழற்சியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இந்திய அணியில் இஷாந்த் ஷர்மாவை குல்தீப் யாதவ் பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தொடரை ஏற்கெனவே வென்றபோதும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்குள் இத்தொடர் அடங்குகின்ற நிலையில் இளம் துடுப்பாட்டவீரர் ஷுப்மன் கில் தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டி ஏற்படும் என்றே கருதப்படுகிறது. ஏனெனில், காயங்களில்லாமல் விட்டால் இந்திய அணியில் வேறெந்த மாற்றமும் இருக்காது என்றே கருதப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .