2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இந்திய டெஸ்ட் குழாமில் பண்ட்

Editorial   / 2018 ஜூலை 18 , பி.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்தியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதன்முறையாக டெஸ்ட் குழாமில் இளம் அதிரடி விக்கெட் காப்பாளர் றிஷப் பண்ட் இடம்பெற்றுள்ளார்.

இதேவேளை, அறிவிக்கப்பட்டுள்ள 18 பேர் கொண்ட குழாமில் காயம் முழுமையாகக் குணமடையாததன் காரணமாக விக்கெட் காப்பாளர் ரித்திமான் சஹா குழாமில் இடம்பெறாத நிலையிலேயே தினேஷ் கார்த்திக்குடன் இணைந்து பார்த்திவ் பட்டேலைத் தாண்டி மேலதிக விக்கெட் காப்பாளராக றிஷப் பண்ட் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில், மேலதிகத் துடுப்பாட்ட வீரராக கருண் நாயரே இடம்பெற்றுள்ள நிலையில், குழாமில் ரோகித் ஷர்மா இடம்பெறவில்லை.

இதேவேளை, அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் ஜஸ்பிரிட் பும்ரா இடம்பெற்றுள்ளபோதும் முறிவடைந்த பெருவிரலிருந்து குணமடைந்து வருகின்ற அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்தே உடற்றகுதியைப் பொருட்டு அணித் தேர்வுக்குத் தகுதியானவராக இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

இதுதவிர, நேற்று  இடம்பெற்ற இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் விளையாடியதன் மூலம் தனது கீழ் முதுகு உபாதையை அதிகரித்துக் கொண்ட புவ்னேஷ்வர் குமாரின் நிலை குறித்து ஆராயப்பட்டதன் பின்னர் குழாமில் அவரைச் சேர்ப்பதா என்ற முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜாவுக்கு மேலதிகமாக, இங்கிலாந்துக்கெதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் பிரகாசித்த குல்தீவ் யாதவ் மூன்றாவது சுழற்பந்துவீச்சாளராக குழாமில் இடம்பெற்றுள்ளார்.

குழாம்: விராத் கோலி (அணித்தலைவர்), ஷீகர் தவான், லோகேஷ் ராகுல், முரளி விஜய், செட்டேஸ்வர் புஜாரா, அஜின்கியா ரஹானே, கருண் நாயர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் காப்பாளர்), றிஷப் பண்ட் (விக்கெட் காப்பாளர்), இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹர்டிக் பாண்டியா, இஷாந்த் ஷர்மா, மொஹமட் ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, ஷர்துல் தாக்கூர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .