2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’இந்தியாவில் டெஸ்டொன்றை வெல்வது கனவு’

Editorial   / 2017 நவம்பர் 05 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியொன்றை இன்னும் வென்றிருக்காத நிலையில், இந்தியாவில் டெஸ்ட் போட்டியொன்றை வெல்வது தனது கனவு என இலங்கையணியின் சிரேஷ்ட வீரரான ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார்.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக, இந்தியாவுக்கு இலங்கை அணி சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே ஹேரத்தின் மேற்குறித்த கருத்து வெளியாகியுள்ளது. கொல்கத்தாவில் இம்மாதம் 16ஆம் திகதி ஆரம்பிக்கும் முதலாவது போட்டியுடன் இத்தொடர் ஆரம்பிக்கின்றது.

பாகிஸ்தானுக்கெதிராக, ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானின் தொடர் வெற்றியை முடிவுக்குக்கு கொண்டு வந்த ரங்கன ஹேரத், 2011ஆம் ஆண்டு டேர்பனில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, தென்னாபிரிக்காவில் இலங்கை அணி முதலாவது டெஸ்ட் வெற்றியைப் பெற உதவியிருந்தார்.

இந்நிலையிலேயே, இந்தியாவில் டெஸ்ட் போட்டியொன்றை வெல்வது தனது கனவுகளிலொன்று எனத் தெரிவித்துள்ள ஹேரத், தாம் இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியையும் ஒருபோதும் வெல்லாத நிலையில், இந்தியாவில் டெஸ்ட் போட்டியொன்றை வெல்வது சிறப்பாக இருக்குமென்று கூறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கெதிராகப் பெற்ற தொடர் வெற்றி தமக்கு நிறைய நம்பிக்கையையளித்த்தாகவும் வெற்றி பெறும் மனநிலை முக்கியம் எனக் கூறிய ஹேரத், பாகிஸ்தானுக்கெதிராக வெளிப்படுத்திய போராட்டக் குணத்தை வெளிப்படுத்தினால், இந்தியாவில் தாங்கள் வெல்ல்லாம் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்திய அணி நிறைய அனுபவத்தைக் கொண்டிருப்பதாகவும் இந்தியாவில் சிறந்த முதற்தர போட்டிக் கட்டமைப்பு காணப்படுவதாகவும் தெரிவித்த ஹேரத், பெரிய இனிங்ஸ்களில் வீரர்கள் விளையாடுவதற்கும் தட்டையான ஆடுகளங்களில் வித்தியாசமாக பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவதற்கும் ரஞ்சி கிண்ணப் போட்டிகள் உதவுவதாகவும் தமது வீரர்கள் இவ்வாறான அனுகூலங்களைப் பெறுவதில்லை என்று கூறியுள்ளார்.

இலங்கையில், அண்மையில் இடம்பெற்ற இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் தடுமாறியிருந்த ஹேரத், இரண்டு போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகளை மாத்திரமே கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X