2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இந்தியாவுக்கு முட்டுக்கட்டை போடுமா நியூசிலாந்து?

Editorial   / 2019 ஜனவரி 27 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டி, மெளன்ட் மகட்டரேயில் இலங்கை நேரப்படி நாளை காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இத்தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கெனவே வென்றிருந்த இந்தியா, நேற்று இடம்பெற்றிருந்த இரண்டாவது போட்டியிலும் இலகுவாக வென்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கையில், நாளைய போட்டியிலும் தோற்றால் தொடரை நியூசிலாந்து தாரை வார்க்க வேண்டி வரும்.

இந்நிலையில், இந்தியாவுக்கு கடும் சவாலை வழங்க நியூசிலாந்து முயலும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. முதலிரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்தின் பிரதான பிரச்சினையாக வகைதொகையாக இந்திய சுழற்பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டுகளை பறிகொடுப்பதே காணப்படுகிறது.

அந்தவகையில், நியூசிலாந்தின் இப்போட்டிக்கான குழாமில் மேலதிகமாக துடுப்பாட்டவீரர்கள் இல்லையென்ற நிலையில், அணியிலிருக்கின்ற சுழற்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்ளக்கூடியவர்களான அணித்தலைவர் கேன் வில்லியம்சன், சிரேஷ்ட வீரர் றொஸ் டெய்லர், டொம் லேதம் ஆகியோரின் இனிங்ஸ்களிலேயே அவ்வணிக்கான வெற்றி வாய்ப்பு தங்கியிருக்கிறது.

இதுதவிர, உலகக் கிண்ணத்துக்கு இன்னும் அதிக காலம் இல்லாத நிலையில், அதற்கு அனைத்து அணிகளும் தயாராகுகையில் அண்மைக் காலமாக தொடர்ச்சியாக நியூசிலாந்தின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் கொலின் மன்றோ தடுமாறுகையில், அவரும் பெரிய ஓட்ட எண்ணிக்கையொன்றை பெறவேண்டிய கட்டாயத்திலுள்ளார்.

பந்துவீச்சுப் பக்கமும் நியூசிலாந்தின் பந்துவீச்சாளர்களை இலகுவாக இந்திய வீரர்கள் எதிர்கொள்வதோடு, சகலதுறைவீரராகக் களமிறங்கிய கொலின் டி கிரான்ட்ஹொம் சொதப்பிய நிலையில் அவரை மற் ஹென்றி அணியில் பிரதியீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியைப் பொறுத்த வரையில், அவ்வணியின் அனைத்து பக்கங்களும் பலமாக தற்போது தோற்றமளிக்கின்றபோதும் தமது மத்தியவரிசையிடமிருந்து குறிப்பாக அம்பாதி ராயுடுவிடமிருந்து மேலும் மேம்பட்ட பெறுபேறுகளை அந்திய மண்ணில் இந்தியா எதிர்பார்க்கின்றது. இந்தியாவைப் பொறுத்த வரையில், இரண்டாவது போட்டியில் களமிறங்கிய அதேயணியே இப்போட்டியிலும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .