2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இந்தியாவை வென்றது தென்னாபிரிக்கா

Editorial   / 2018 பெப்ரவரி 11 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, இந்திய அணிகளுக்கிடையிலான ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஜொஹன்னஸ்பேர்க்கில் நேற்று இடம்பெற்ற நான்காவது போட்டியில், டக் வேர்த் லூயிஸ் முறைப்படி 5 விக்கெட்டுகளால் தென்னாபிரிக்கா வென்றது.

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 289 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில், ஷீகர் தவான் 109 (105), விராத் கோலி 75 (83), மகேந்திர சிங் டோனி ஆட்டமிழக்காமல் 42 (43) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், லுங்கி என்கிடி, கஜிஸோ றபடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 290 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, 7.2 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 42 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் மழை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. இதன்பின்னர், 28 ஓவர்களில் 202 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு தென்னாபிரிக்காவுக்கு வழங்கப்பட்ட நிலையில், 25.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், ஹென்றிச் கிளாசென் ஆட்டமிழக்காமல் 43 (27), டேவிட் மில்லர் 39 (28), ஏ.பி டி வில்லியர்ஸ் 26 (18), அன்டிலி பெக்லுவாயோ ஆட்டமிழக்காமல் 23 (11) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இப்போட்டியின் நாயகனாக, ஹென்றிச் கிளாசென் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .