2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்டர் மிலனை வென்றது ஜுவென்டஸ்

Editorial   / 2020 மார்ச் 09 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற இன்டர் மிலனுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான ஜுவென்டஸ் வென்றது.

இப்போட்டியின் ஆரம்பத்தில் கோல் கம்பத்தை நோக்கி ஜுவென்டஸின் பின்களவீரர் மத்தியாஸ் டி லிஜிட் தலையால் முட்டிய பந்தை இன்டர் மிலனின் கோல் காப்பாளர் சமிர் ஹன்டனோவிச் தடுத்திருந்ததுடன், ஜுவென்டஸின் மத்தியகளவீரரான பிளெய்ஸி மத்தியூடியின் கோல் கம்பத்தை நோக்கிய உதையையும் தட்டி விட்டிருந்தார்.

பின்னர் இன்டர் மிலனின் மத்தியகளவீரரான மார்செலோ பிரஸ்னோவிச்சின் கோல் கம்பத்தை நோக்கிய உதையை ஜுவென்டஸின் கோல் காப்பாளர் வொஜெக் ஸ்டான்ஸே தடுத்திருந்தார்.

இந்நிலையில், பிளெய்ஸி மத்தியூடி வழங்கிய பந்தானது அவரின் சக முன்களவீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் அடைவதை இன்டர் மிலனின் பின்களவீரர் அலெஸான்ட்ரோ பஸ்டோனி தடுத்தபோதும் அது ஜுவென்டஸின் இன்னொரு மத்தியகளவீரரான ஆரோன் றம்சியிடம் செல்ல அவர் அதை போட்டியின் 54ஆவது நிமிடத்தில் கோலாக்கி ஜுவென்டஸுக்கு முன்னிலையை வழங்கினார்.

பின்னர் ஆரோன் றம்சியுடன் பந்தைப் பரிமாறிக் கொண்டு வந்த மாற்றுவீரராகக் களமிறங்கிய ஜுவென்டஸின் முன்களவீரரான போலோ டிபாலா, இன்டர் மிலனின் பின்களவீரர் அஷ்லி யங்கைத் தாண்டி 67ஆவது நிமிடத்தில் பெற்ற கோலுடன் தமது முன்னிலையை ஜுவென்டஸ் இரட்டிப்பாக்கியது.

போட்டியின் இறுதி நிமிடங்களில் கோல் கம்பத்தை நோக்கி கிறிஸ்டியானோ செலுத்திய இரண்டு உதைகள் கோல் கம்பத்துக்கு வெளியே சென்றிருந்த நிலையில் இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் வென்றது.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஜெனோவாவுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் ஏ.சி மிலன் தோல்வியடைந்தது. ஏ.சி மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஸல்டான் இப்ராஹிமோவிச் பெற்றிருந்த நிலையில், ஜெனோவா சார்பாகப் பெறப்பட்ட கோல்களை, கொரான் பன்டெவ், பிரான்ஸெஸ்கோ கஸ்ஸாட்டா ஆகியோர் பெற்றிருந்தனர்.

இப்போட்டிகளின் முடிவில் சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் ஜுவென்டஸ் காணப்படுகிறது. 63 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஜுவென்டஸ் காணப்படுகையில், 62 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் லேஸியோ காணப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .