2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

இரண்டாவது டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2021 மே 08 , பி.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட இரண்டு அணிகளுக்குமிடையிலான தொடரில், ஹராரேயில் நேற்று ஆரம்பித்த இந்த டெஸ்டில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், அபிட் அலியின் ஆட்டமிழக்காத 215, அஸார் அலியின் 126, நெளமன் அலியின் 97 ஓட்டங்களோடு, தமது முதலாவது இனிங்ஸை 8 விக்கெட்டுகளை இழந்து 510 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இடைநிறுத்தியது. பந்துவீச்சில், பிளஸிங்க் முஸர்பனி 3, தென்டாய் சிஸோரோ 2, றிச்சர்ட் நகரவா 1,டெஸ்டில் அறிமுகத்தை மேற்கொண்ட லுக் ஜொங்வி 1, டொனால்ட் ட்ரிபானோ 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் சிம்பாப்வே, இன்றைய இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 52 ஓட்டங்களையே பெற்றுத் தடுமாறி வருகிறது.

தற்போது களத்தில், றெஜிஸ் சகப்வா 28, தென்டாய் சிஸோரோ ஒரு ஓட்டத்துடனுள்ளனர். பந்துவீச்சில், சஜிட் கான், ஹஸன் அலி, ஷகீன் ஷா அஃப்ரிடி, டெஸ்டில் அறிமுகத்தை மேற்கொண்ட தபிஷ் கான்  ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .