2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இரண்டாமிடத்துக்கு நடால் முன்னேற்றம்

Editorial   / 2017 ஜூன் 13 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில், 10ஆவது முறையாக சம்பியனான, ஸ்பெய்னின் ரஃபேல் நடால், உலகின் இரண்டாம் நிலை வீரராக தற்போது முன்னேறியுள்ளார்.  

இம்முறை பிரெஞ்சுப் பகிரங்கத் தொடர் ஆரம்பிக்கும் முன்னர், நான்காமிடத்தில் காணப்பட்ட நடால், தற்போது இரண்டு இடங்கள் முன்னேறியே, இரண்டாமிடத்தில் உள்ளார்.  

இந்நிலையில், கருத்துத் தெரிவித்த நடால், “2017ஆம் ஆண்டில், மலோக்ரா தீவில், எனது படகில் மீன் பிடித்துக் கொண்டிருப்பேன் என 2015ஆம் ஆண்டில் நினைத்தேன்” எனக் கூறியுள்ளார்.  

2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017ஆம் ஆண்டு என 10 தடவைகள் பிரெஞ்சுப் பகிரங்கப் பட்டங்களைக் கைப்பற்றியுள்ள நடால், மொத்தமாக 15 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களைக் கைப்பற்றி, அதிக கிரான்ட் ஸ்லாம் பட்டங்களைக் கைப்பற்றியவர்களில், இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில், 18 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களுடன் சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் காணப்படுகின்றார்.  

உலகின் முதல்நிலை வீரராக, ஐக்கிய இராச்சியத்தின் அன்டி மரே தொடருகின்ற நிலையில், பிரெஞ்சுப் பகிரங்கத் தொடர் ஆரம்பிக்கும் முன்னர், இரண்டாமிடத்திலிருந்த சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், நான்காமிடத்துக்குக் கீழிறங்கியுள்ளார்.  

நடாலிடம், 6-2, 6-3, 6-1 என்ற நேர் செட்களில், பிரெஞ்சுப் பகிரங்க இறுதிப் போட்டியில் தோற்ற, சுவிற்ஸர்லாந்தின் ஸ்டான் வவ்றிங்கா, தரவரிசையில் 3ஆம் இடத்தில் நீடிப்பதோடு, பெடரர், 5ஆம் இடத்தில் நீடிக்கிறார்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X