2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இரண்டாமிடத்துக்கு முன்னேறினார் கம்மின்ஸ்

Editorial   / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பற் கமின்ஸ் முன்னேறியுள்ளார்.

இலங்கைக்கெதிரான இரண்டாவது டெஸ்டுக்கு முன்னர் மூன்றாமிடத்திலிருந்த கமின்ஸ், குறித்த டெஸ்டில் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே ஓரிடம் முன்னேறி இரண்டாமிடத்தை அடைந்துள்ளார்.

இதேவேளை, இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டுக்கு முன்னர் 10ஆம் இடத்தில் காணப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர், குறித்த டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து நான்கு இடங்கள் முன்னேறி ஆறாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. கஜிஸோ றபாடா, 2. பற் கமின்ஸ், 3. ஜேம்ஸ் அன்டர்சன், 4. வேர்ணன் பிலாந்தர், 5. இரவீந்திர ஜடேஜா, 6. ஜேசன் ஹோல்டர், 7. ட்ரெண்ட் போல்ட், 8. மொஹமட் அப்பாஸ், 9. டிம் செளதி, 10. இரவிச்சந்திர அஷ்வின்

 

இதேவேளை, துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமெதுவும் ஏற்படாத நிலையில், முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. விராத் கோலி, 2. கேன் வில்லியம்சன், 3. செட்டேஸ்வர் புஜாரா, 4. ஸ்டீவ் ஸ்மித், 5. ஹென்றி நிக்கொல்ஸ், 6. டேவிட் வோணர், 7. ஏய்டன் மர்க்ரம் 8. ஜோ றூட், 9. ஹஷிம் அம்லா, 10. டீன் எல்கர்
     

இந்நிலையில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் முன்னேறியுள்ளார். இந்தியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே ஏழிடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தை போல்ட் அடைந்துள்ளார்.

இதேவேளை, நியூசிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் ஒன்பது விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால், ஆறாமிடத்திலிருந்து ஓரிடம் முன்ன்னேறி ஐந்தாமிடத்தை அடைந்துள்ளார்.

அந்தவகையில், முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஜஸ்பிரிட் பும்ரா, 2. ரஷீட் கான், 3. ட்ரெண்ட் போல்ட், 4. குல்தீப் யாதவ், 5. யுஸ்வேந்திர சஹால், 6. முஸ்தபிசூர் ரஹ்மான், 7. கஜிஸோ றபாடா, 8. அடில் ரஹீட், 9. முஜீப் உர் ரஹ்மான், 10. ஜொஷ் ஹேசில்வூட்.

 

இந்நிலையில், பாகிஸ்தானுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 116 ஓட்டங்களைப் பெற்ற குயின்டன் டி கொக், ஓரிடம் முன்னேறி எட்டாமிடத்தை அடைந்ததுடன் இதே தொடரில் 167 ஓட்டங்களைப் பெற்ற பக்கர் ஸமன் இரண்டு இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்கள் பின்வருமாறு,

  1. விராத் கோலி, 2. ரோகித் ஷர்மா, 3. றொஸ் டெய்லர், 4. ஜோ றூட், 5. பாபர் அஸாம், 6. பப் டு பிளெஸி, 7. ஷை ஹோப், 8. குயின்டன் டி கொக், 9. பக்கர் ஸமன், 10. ஷீகர் தவான்.  

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .