2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பிக்கின்றது

Editorial   / 2020 ஜனவரி 27 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஹராரேயில் இலங்கை நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு ஆரம்பிக்கின்றது.

இரண்டு அணிகளுக்குமிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை வென்றிருந்தநிலையில் தொடரைச் சமப்படுத்துவதற்கு பந்துவீச்சில் மிகப்பெருமளவு முன்னேற்றத்தை சிம்பாப்வே காண்பிக்கவேண்டியுள்ளது.

முதலாவது டெஸ்டில் அறிமுக வேகப்பந்துவீச்சாளர் விக்டர் நயுச்சி தவிர சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர்கள் கைல் ஜார்விஸ், டொனால்ட் ட்ரிபானோ, அறிமுக சுழற்பந்துவீச்சாளர் ஐன்ஸ்லி என்டொல்வு ஆகியோர் குறிப்பிடும்படியாக செயற்பட்டிருக்காத நிலையில், இவர்கள் பாரியளவு முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டியுள்ளது.

தவிர, சிம்பாப்வேயின் அணித்தலைவர் ஷோன் வில்லியம்ஸ், சகலதுறைவீரர் சிகண்டர் ராசா ஆகியோர் சுழற்பந்துவீச்சை கவனித்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் ஐன்ஸ்லி என்டொல்வை வேகப்பந்துவீச்சாளர் கார்ள் மும்பாவால் பிரதியிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இதேவேளை, மறுப்பக்கமாக இலங்கையணியில் சொல்லிக்கொள்ளும்படியாக குறைகள் எவையும் இல்லாதபோதும், குஷல் மென்டிஸ், தனஞ்சய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் அரைச்சதங்களைப் பெற்றதுடன், அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, ஒஷட பெர்ணான்டோ ஆகியோர் ஆரம்பங்களைப் பெற்றிருந்தநிலையில் அஞ்சலோ மத்தியூஸ் தவிர வேறெவரும் பாரிய ஓட்ட எண்ணிக்கையாக தமது ஆரம்பங்களை மாற்றியிருக்கவில்லை. ஆகவே இதைத் திருத்தியமைக்க வேண்டிய தேவை காணப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் இலங்கையணி: 1. திமுத் கருணாரத்ன (அணித்தலைவர்), 2. ஒஷட பெர்ணான்டோ, 3. குசல் மென்டிஸ், 4. அஞ்சலோ மத்தியூஸ், 5. தினேஷ் சந்திமால், 6. தனஞ்சய டி சில்வா, 7. நிரோஷன் டிக்வெல்ல (விக்கெட் காப்பாளர்), 8. சுரங்க லக்மால், 9. லசித் எம்புல்தெனிய, 10. கசுன் ராஜித, 11. லஹிரு குமார.

எதிர்பார்க்கப்படும் சிம்பாப்வே அணி: 1. பிறின்ஸ் மஸ்வெளரே, 2. கெவின் கஸுஸா, 3. கிரேய்க் எர்வின், 4. பிரண்டன் டெய்லர், 5. ஷோன் வில்லியம்ஸ், 6. சிகண்டர் ராசா, 7. றெஜிஸ் சகப்வா, 8. டொனால்ட் ட்ரிபானோ, 9. கைல் ஜார்விஸ், 10. ஐன்ஸ்லி என்டொல்வு, 11. விக்டர் நயுச்சி.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .