2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இரண்டாவது தகுதிகாண் போட்டியில் பற்றியொட்ஸ்

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கரீபியன் பிறீமியர் லீக்கின் இரண்டாவது தகுதிகாண் போட்டிக்கு சென். கிட்ஸ் அன்ட் நெவிஸ் பற்றியொட்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.

கயானாவில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற வெளியேற்றப் போட்டியில், ஒரு பந்து மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளால் ஜமைக்கா தலாவாஸ் அணியை வெளியேற்றப் போட்டியில் வென்றததைத் தொடர்ந்தே இரண்டாவது தகுதிகாண் போட்டிக்கு சென். கிட்ஸ் அன்ட் நெவிஸ் பற்றியொட்ஸ் அணி தகுதிபெற்றுள்ளது.

இப்போட்டியில் துடுப்பெடுத்தாடிய ஜமைக்கா தலாவாஸ் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், கிளென் பிலிப்ஸ் 103 (63), றொஸ் டெய்லர் 33 (23), டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 19 (13), றொவ்மன் பவல் 15 (09) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், பென் கட்டிங் 2, பபியான் அலென், கார்லோஸ் பிறத்வெய்ட், தப்ரையாஸ் ஷம்சி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பதிலுக்கு, 192 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சென். கிட்ஸ் அன்ட் நெவிஸ் பற்றியொட்ஸ் அணி, 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், அன்டன் டேவ்சிச் 50 (23), கிறிஸ் கெய்ல் 26 (30), பபியான் அலென் 23 (10), பிரென்டன் கிங் 21 (08), றஸி வான் டர் டுஸன் 20 (22), பென் கட்டிங் ஆட்டமிழக்காமல் 17 (10) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், இஷ் சோதி, ஒஷனே தோமஸ் ஆகியோர் தலா 3, ஸ்டீவன் ஜேக்கப்ஸ், றொவ்மன் பவல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக அன்டன் டேவ்சிச் தெரிவானார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .