2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இராஜினாமா செய்தார் நிக் போத்தாஸ்

Editorial   / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்புப் பயிற்சியாளராகவிருந்து, பின்னர் தற்காலிக தலைமைப் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றிய நிக் போத்தாஸ், இம்மாதம் 13ஆம் திகதியிலிருந்து தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளரான கிரஹாம் போர்ட், தனது பதவியிலிருந்து கடந்தாண்டு ஜூன் மாதம் விலகிய பின்னர், களத்தடுப்புப் பயிற்சியாளராக 2016ஆம் ஆண்டு இணைந்து கொண்ட நிக் போத்தாஸ், தற்காலிக தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

நிக் போத்தாஸின் பயிற்றுவிப்பின் கீழ், இலங்கையிலும் இந்தியாவிலும் இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரை இழந்திருந்த இலங்கை, 2010ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் நடைபெறவேண்டிய பாகிஸ்தானின் போட்டிகள் இடம்பெறும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானின் தொடர் வெற்றியை முடிவுக்கு கொண்டுவந்து, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என பாகிஸ்தானை வெள்ளையடித்திருந்தது. இது தவிர, சிம்பாப்வேக்கெதிரான ஒருநாள் தொடரிலும் நிக் போத்தாஸின் பயிற்றுவிப்பு காலத்திலேயே முதற்தடவையாக இலங்கை தோல்வியடைந்திருந்தது.

இந்நிலையில், சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்கு இலங்கை கிரிக்கெட் சபை விளம்பரப்படுத்தியுள்ள நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் வீரர் முஷ்டாக் அஹமட் அல்லது இலங்கையணின் முன்னாள் வீரர் ருவான் கல்பகே ஆகியோர் சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, உயர் பெறுபேறு முகாமையாளராகவிருந்த சைமன் வில்லிஸ் விலகுகின்ற நிலையில், கிரிக்கெட் முகாமையாளராகவிருக்கின்ற அசங்க குருசிங்க அப்பதவிக்கு நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X