2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இறுதிப் போட்டியில் இந்தியா

Editorial   / 2018 ஜனவரி 30 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்தில் இடம்பெற்றுவரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதிபெற்றுள்ளது. கிறைஸ்ட்சேர்ச்சில் இன்று இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில், 203 ஓட்டங்களால் பாகிஸ்தானை வென்றமையைத் தொடர்ந்தே இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதிபெற்றுள்ளது.

ஸ்கோர் விவரம்:

இந்தியா: 272/9 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: சுப்மன் கில் ஆ.இ 102 (94), மனோஜ் கல்ரா 47 (59), பிறித்திவி ஷா 41 (42), அனுகுல் றோய் 33 (45) ஓட்டங்கள். பந்துவீச்சு: முஹமட் மூஸா 4/67, அர்ஷாட் இக்பால் 3/51)

பாகிஸ்ஹான்: 69/10 (29.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: றொஹைல் நஸீர் 18 (39), சாட் கான் 15 (33), முஹமட் மூஸா 11 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: இஷான் பொரேல் 4/17, றியான் பராக் 2/6, ஷிவ சிங் 2/20)

போட்டியின் நாயகன்: சுப்மன் கில்

இதேவேளை, ஏழாமிடத்துக்கான போட்டியில், நியூசிலாந்தை 32 ஓட்டங்களால் வென்ற இங்கிலாந்து ஏழாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.

ஸ்கோர் விவரம்:

இங்கிலாந்து: 261/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: டொம் பன்டன் 112 (122), ஜக் டேவிஸ் 63 (76) ஓட்டங்கள். பந்துவீச்சு: லுக் ஜோர்ஸன் 3/29, றஷின் றவிந்ர 2/80)

நியூசிலாந்து:  229/10 (47.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: பின் அலென் 87 (100), கேட்டன் கிளார்க் 60 (69) ஓட்டங்கள். பந்துவீச்சு: வில் ஜக்ஸ் 3/41, இவான் வூட்ஸ் 3/44, டிலோன் பென்னிங்டன் 2/37)

போட்டியின் நாயகன்: டொம் பன்டன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .