2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இறுதிப் போட்டியில் ஐக்கிய அமெரிக்கா

Editorial   / 2017 ஜூலை 24 , மு.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொன்ககாப் தங்கக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டிக்கு, ஐக்கிய அமெரிக்கா தகுதிபெற்றுள்ளது. இலங்கை நேரப்படி, நேற்று இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில், கொஸ்டறிக்காவை வென்றே, இறுதிப் போட்டிக்கு ஐக்கிய அமெரிக்கா தகுதிபெற்றுள்ளது.  

ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதியில், இரண்டு அணிகளும் கோலெதனையும் பெற்றிருக்காத நிலையில், முன்னேறிய கொஸ்டாறிக்காவின் கோல் காப்பாளர் பற்றிக் பெம்பேர்ட்டனைத் தாண்டி, மாற்று வீரராகக் களமிறங்கிய கிளின்ட் டெம்ப்ஸேயிடமிருந்த பெற்ற பந்தை ஜொஸி அல்டிடோர், போட்டியின் 72ஆவது நிமிடத்தில் கோலாக்க, ஐக்கிய அமெரிக்கா முன்னிலை பெற்றது.  

பின்னர், அடுத்த 10 நிமிடங்களில், அபாரமானதொரு “பிறீ கிக்” மூலம் கிளின்ட் டெம்ப்ஸே பெற்ற கோலின் மூலம் தமது வெற்றியை உறுதிப்படுத்தி, 2-0 என்ற கோல் கணக்கில் இப்போட்டியை வென்று இறுதிப் போட்டிக்குள் ஐக்கிய அமெரிக்கா நுழைந்தது.  

மேற்படி கோலுடன் சேர்த்து, ஐக்கிய அமெரிக்காவுக்காக 57 கோல்களைப் பெற்றுள்ள கிளின்ட் டெம்ப்ஸே, ஐக்கிய அமெரிக்காவுக்காக அதிக கோல்களைப் பெற்ற லன்டன் டெனோவனின் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தியுள்ளார்.  

குழுநிலைப் போட்டிகளின் பின்னரே, கிளின்ட் டெம்ப்ஸே, கோல் காப்பாளர் டிம் ஹொவார்ட்ம் ஜொஸி அல்டிடோர் ஆகியோர் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்த நிலையில், இவர்களது இணைப்பு முக்கியமானதாய் அமைந்தது.  

ஜேர்ஜன் கிளின்ஸ்மனைத் தொடர்ந்து, கடந்தாண்டு நவம்பரில், ஐக்கிய அமெரிக்காவின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற புரூஸ் அரினா, தொடர்ச்சியாக 13ஆவது போட்டியில், இப்போட்டியுடன் சேர்த்து, தோற்கடிக்கப்படாதகவரக இருக்கின்றார்.  

கொன்ககாப் தங்கக் கிண்ணத்தை ஐந்து தடவைகள் ஐக்கிய அமெரிக்கா வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .